India
ஆகஸ்ட் 10ம் தேதி கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி... புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு...
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததையோட்டி அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
ராஜினாமாவை வாபஸ் பெறச் சொல்லி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உட்பட பலர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் ஆகஸ்ட் 10ம் தேதி கூடுகிறது காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தலைமையில் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற இருக்கிறது.
ராஜினாமா முடிவை ராகுல்காந்தி மாற்றிக்கொள்ளாததால் காங்கிரஸுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாகவும், காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
இதற்கிடையில், காங்கிரஸின் அடுத்த தலைவராக பிரியங்கா காந்தியை நியமிக்க வேண்டும் என பஞ்சாப் முதல்வர் உட்பட பலர் பரிந்துரைத்து வருகின்றனர். முன்னதாக, காங்கிரஸுக்கு காந்தி குடும்பத்தில் இருந்து எவரும் இனி தலைவாராக மாட்டார்கள் என ராகுல்காந்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ஜனவரிக்குள் 1 கிலோ அரிசி விலை ரூ.120-ஆக உயரும் அபாயம்! - த.வெ.க.வின் தோல்வியால் தவிக்கும் மக்கள்!
-
த.வெ.க எம்.எல்.ஏ. சரவணன் மீது பணமோசடி புகார் : “இதுதான் தூய ஆட்சியின் லட்சணமா?” - கனிமொழி எம்.பி. சாடல்!
-
“பாலுக்கு காவல், பூனைக்கு தோழனா?” : விஜய்யின் Double Action-க்கு தயாநிதி மாறன் கண்டனம்!
-
தேசிய விருதுகள் முதல் பத்ம ஸ்ரீ விருதுகள் வரை.. காலா பட நடிகர் நானா படேகர் காலமானார்!
-
குடிநீர் தொட்டியில் மலம்.. மூடி மறைத்த அரசுப் பள்ளி நிர்வாகம்.. 2 நாட்களாக அவலம்!