India
முதல்வர் எடப்பாடி அறிமுகப்படுத்திய கோனா எல்க்ட்ரிக் கார் வெடித்து சிதறியது - கார் பிரியர்கள் அதிர்ச்சி
இந்தியாவில் எரிபொருள் பயன்பாட்டை தவிர்த்து எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான தீவிரமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அந்த வகையில் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு அதிகரித்திருக்கும் வேளையில் எலெக்ட்ரிக் கார்களையும் அறிமுகப்படுத்தும் வகையில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது மத்திய அரசு.
இந்த நிலையில், கடந்த ஜூலை 9ம் தேதி, இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் காரான ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா எஸ்.யூ.வி. அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த வாகனத்தில் பயணித்து அறிமுகம் செய்து வைத்தார். இந்த காரில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 452 கிமீ வரை பயணித்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரின் விலை 25.30 லட்சம் ரூபாய்.
ஏற்கெனவே இந்தியாவில் சில எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் இருந்தாலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஹூண்டாயின் கோனா மக்களை கவர்ந்துள்ளது. விலை அதிகம் என்பதால் மட்டுமே மக்கள் கோனா காரை வாங்குவதில் சற்று தயக்கம் காண்பித்து வந்த நிலையில், சமீபத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜி.எஸ்.டியை 12 சதவிகிதத்தில் இருந்து 5% ஆக குறைத்தது மத்திய அரசு. இதனால் கோனா காரின் விலை 1.50 லட்சம் ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளது.
இதன் மூலம் கார் பிரியர்கள் மற்றும் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரம், கனடா நாட்டு கேனா கார் மாடலில் நடந்த விபத்தால் மக்கள் சற்று அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கனடாவின் மாண்ட்ரியல் என்ற பகுதியில் உள்ள வீட்டின் காரேஜில் நிறுத்திவைக்கப்பட்ட ஹூண்டாய் கோனா கார் கடந்த ஜூலை 26 அன்று வெடித்து விபத்துக்குள்ளனது.
இது தொடர்பாக பேசிய காரின் உரிமையாளர் பியாரோ கோசெண்டினோ, ”காரேஜில் இருந்து கரும்புகை வந்ததை அடுத்து சென்று பார்த்ததில் தீயணைப்புத் துறைக்கு தகவலளித்தாகவும், 30 தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுப்படுத்தியதாகவும் தெரிவித்தார். அதில், நல்வாய்ப்பாக எவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை.” என கூறினார்.
விபத்து குறித்து அந்நாட்டு போலீசாரும், ஹூண்டாய் நிறுவனமும் விசாரித்து வருகின்றனர். எலெக்ட்ரிக் கார்களில் உள்ள லித்தியம் இயான் பேட்டரிகள் அதிகபடியான வெப்பத்தின் தாக்கத்தால் தீப்பற்றியிருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனையறிந்த இந்திய வாடிக்கையாளர்கள் ஹூண்டாய் கோனா கார் வாங்குவதால் ஏற்படும் விளைவுகளை எண்ணி கலக்கத்தில் உள்ளனர்.
Also Read
-
உதயநிதி ஏற்படுத்திய எழுச்சி : தனக்குத் தானே ‘சூனியம்' வைத்துக் கொண்ட முதலமைச்சர் விஜய்!
-
“தவெக ஆதரவு.. அமைச்சர் பதவி ஆசை.. ராஜினாமா செய்ய வைகோ நிர்பந்தித்தார்” : மதிமுக எம்.எல்.ஏ-க்கள் பேட்டி!
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!