India
‘பாசிச’ மோடி அரசின் அணை பாதுகாப்பு மசோதா : எதிர்க்கும் அ.தி.மு.க - அந்த அளவிற்கு மோசமான திட்டமா அது ?
பா.ஜ.க இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பில் அமர்ந்த நாள் முதல், மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் பல நடவடிக்கையை மோசமான பல மசோதாக்கள் மூலம் நிறைவேற்றி வருகிறது. இதன் மூலம் பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலத்தில் கூட மத்திய அரசு அதிகாரத்தை பயன்படுத்தி நிர்வாகத்தில் தலையீடும் வேலைகளை பாஜக மேற்கொண்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, நாடு முழுவதும் உள்ள அணைகளை முறைப்படுத்தி பாதுகாக்கும் நடவடிக்கை என்ற பெயரில் அணை பாதுகாப்பு மசோதா ஒன்றை கடந்தாண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதற்கு தற்போது அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்த அணை பாதுகாப்பு மசோதாவில், ஒரு மாநிலத்துக்குச் சொந்தமான அணை மற்றொரு மாநிலத்தில் இருந்தால் அதன் பராமரிப்பும், இயக்கமும் தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும். இதற்கு அணைத்து மாநிலங்களில் இருந்து வலுவான எதிர்ப்பு கிளம்பியது.
பா.ஜ.க விசுவாசத்திற்கு குந்தகம் ஏற்படாத வகையில் நடந்துகொள்ளும் அ.தி.மு.க அரசே அதை எதிர்த்ததுள்ளது. அதுமட்டுமின்றி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில், “மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அணைகள், வனப்பகுதியில் இருந்தால் அந்த அணைகளை மாநில அதிகாரிகளே நிர்வகிக்கும் உரிமை மறுக்கப்பட்டிருப்பதை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அனைத்து மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து ஏற்படும் வரை, அணை பாதுகாப்பு மசோதாவை சட்டமாக்கும் நடவடிக்கைகளை பிரதமர் மோடி தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் இதை எதனையும் பொருட்படுத்தாத மோடி அரசாங்கம் அந்த மசோதாவில் சில திருத்தங்கள் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த அணைகளை மாநில அரசே பராமரிக்கும் வகையில் மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஒருவேளை இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் முல்லை பெரியார், பரம்பிக்குளம் பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு உள்ளிட்ட அணைகளின் மீது தமிழக அரசிற்கு இருக்கும் உரிமை பறிக்கப்பட்டுவிடும் என்று தகவல் வெளிவந்துள்ளது.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!