India
பட்ஜெட் எதிரொலியால் வெகுவாகச் சரிந்த பங்குச்சந்தை : நிதியமைச்சகத்தின் தோல்வியா?
பட்ஜெட் அறிவிப்புகளால் இந்திய பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை முதல் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட ஒரே நாளில் பங்கு மதிப்பு 2.2 லட்சம் கோடி சரிந்ததால் முதலீட்டாளர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.
புதிய பா.ஜ.க அரசு பொறுப்பேற்ற நிலையில் நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த ஜூலை 5-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கலின்போது உயர்வுடன் காணப்பட்ட பங்குச் சந்தைகள் பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு கடும் சரிவைச் சந்தித்தன.
தங்கம், பெட்ரோல், டீசல் ஆகியவற்றிற்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளால் பங்குச்சந்தை வீழ்ந்தது. வார இறுதி விடுமுறைக்குப் பின்னர் பங்குச்சந்தை எழுச்சி பெறும் எனக் கருதப்பட்ட நிலையில், இன்றும் வர்த்தகம் சரிவுடன் காணப்படுகிறது.
இன்று பிற்பகல் நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவரைந்து 38,666 புள்ளிகளாக வீழ்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 268 புள்ளிகளுக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்து 11,600 புள்ளிகளாக இருக்கிறது.
பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் நாட்டைச் சீர்குலைத்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கூடுதல் வரிகளால் பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்ததும் நிதி அமைச்சகத்தின் போதாமையாகவே பார்க்கப்படுகிறது.
Also Read
-
சோறா.. இட்லியா.. கல்லா.. சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு நேரும் அவலம் - நடவடிக்கை எடுப்பாரா வன்னியரசு?
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!