India
தொடர் கனமழை : வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை நகரம் !
மகாராஷ்டிர மாநிலம் மும்பை, புனே, தானே மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மும்பையில் சாலைகள் மற்றும் ரெயில் தண்டவாளங்கள் அனைத்தும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக பஸ், ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை காரணமாக மும்பையில் உள்ள அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மும்பையின் பிம்பிரிபாடா என்ற பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 12 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் புனேவில் உள்ள கல்லூரி தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். விபத்து நிகழ்ந்த பகுதிகளில் மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். மும்பையில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளிவந்துள்ளது.
Also Read
-
”தமிழ்நாட்டை அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி, மேம்பாட்டு மையமாக மாற்ற வேண்டும்” : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!
-
கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் : இரவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு!
-
பட்டியலின இளைஞர் கொலை : முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் - காங்கிரஸ்!
-
”தமிழ்நாடு போராடும்... தமிழ்நாடு வெல்லும்” : ஆர்.என்.ரவி கேள்விக்கு நெத்தியடி பதில் தந்த முரசொலி!
-
2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு !