India
டேங்கர் லாரிஉரிமையாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தம்: காஸ் தட்டுப்பாடு நிலவும் அபாயம்!
தென்மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் தமிழகம், கேரளா, ஆந்திரா, பாண்டிச்சேரி, கர்நாடகா, தெலங்கானா ஆகிய 6 மாநிலங்களை உள்ளடக்கிய செயல்படுகிறது. இதன் தலைமையிடம் நாமக்கலில் உள்ளது.இந்த சங்கத்தின் தலைமையில் தான் தற்போது லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
5 ஆண்டுக்கு ஒரு முறை ஆயில் நிறுவனங்களுடன் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வாடகை ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டு சமையல் எரிவாயுவை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, சிலிண்டர்களில் காஸ் நிரப்பும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுகிறார்கள்.
இதற்காக, நாமக்கல்லை சேர்ந்த 5 ஆயிரத்து 540 டேங்கர் லாரிகள் தமிழகம், கேரளா, ஆந்திரா, பாண்டிச்சேரி, கர்நாடகா, தெலங்கான ஆகிய 6 மாநிலங்களில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆயில் நிறுவனங்கள் நடத்திய புதிய வாடகை டெண்டரில், பல புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன. அந்தந்த மாநில பதிவு எண் கொண்ட வாகனங்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும் என ஆயில் நிறுவனங்கள் அறிவித்தன.
இதற்கு டேங்கர் லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும், ஆயில் நிறுவனங்கள் விதிமுறையை மாற்ற மறுத்துவிட்டன. அதைத் தொடர்ந்து நடைபெற்ற புதிய டெண்டரில், நாமக்கல்லை சேர்ந்த 4,800 எல்பிஜி வாகனங்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைத்தது.
டெண்டரில் பங்கேற்ற 740 வாகனங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த வாகனங்களை காத்திருப்பு பட்டியலில் வைத்து, பின்னர் வேலைவாய்ப்பு அளிப்பதாக ஆயில் நிறுவனங்கள் கூறியது.
ஆனால், டெண்டர் முடிவடைந்து 9 மாதம் ஆகியும், 740 வாகனங்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அதன் உரிமையாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண வரும் 1ம்தேதி முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக கடந்த 20ம் தேதி முடிவெடுத்தனர். அதன்படி, இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஈடுபடுகிறார்கள்.
Also Read
-
“ஏழை மாணவர்களின் பசி போக்கிய காலை உணவுத் திட்டம்.. திராவிட நாயகர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வை”
-
இது பற்றி பேசக்கூடாது என்றால் என்ன நியாயம்? : த.வெ.க அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேள்வி!
-
“த.வெ.க ஆட்சியில் தொடர் கதையாகும் பாலியல் தொல்லைகள்” : அனிதா ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்!
-
“சிங்கப்பெண் படை தொடக்கத்திற்கு பின்னும்.. தொடரும் பாலியல் குற்றங்கள்.. தூங்குகிறாரா முதல்வர் விஜய்!”
-
முதலமைச்சர் தொகுதியிலேயே... : பள்ளிக்குச் சென்ற சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்!