India
புழக்கத்தில் உள்ள நாணயங்கள் குறித்து ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு!
சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி அதிக அளவில் பரவியது, இதனால் சிறு கடைகள் முதல் பெரிய சூப்பர் மார்க்கெட் வரை 10 நாணயங்களை வாங்க மறுத்தனர். அதுமட்டுமின்றி அரசு பேருந்துகளில் பயணிகள் கொடுக்கும் 10 ரூபாய் நாணயங்களைத் தவிர்க்கச் சொல்லி, நடத்துநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிய திருப்பூர் போக்குவரத்துப் மண்டல மேலாளர் தனபால் தற்காலிக பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மக்களும் 10 ரூபாய் நாயணங்களை வாங்க மறுத்து வருகின்றனர். இதையடுத்து அந்த நாணயங்கள் செல்லும் என்று ஆர்.பி.ஐ மீண்டும் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, "ஒவ்வொரு காலகட்டத்துக்கு ஏற்ப பொருளாதாரம் மற்றும் சில கருப்பொருளை மையமாக வைத்து நாணயங்கள் வெளியிடப்படுகின்றன. அந்த நாணயங்கள் நீண்டகாலம் புழக்கத்தில் இருக்கும்.
அதேநேரத்தில் புதிய உருவங்களிலும், புதிய வடிவங்களிலும் நாணயங்கள் வெளியிடப்படும். இதனால் சில நேரங்களில் நாணயங்கள் மீதான நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பப்படுகிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் தாங்கள் பாதிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது.
பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்பவேண்டாம். புழக்கத்தில் உள்ள அனைத்து நாணயங்களும் சட்டப்படி செல்லும். எனவே, அதனை யாரும் வாங்க மறுக்க வேண்டாம்.
அதேபோல அனைத்து வங்கிகளும் நாணயங்களை மாற்றுவதற்கு வரும் பொதுமக்களை திருப்பி அனுப்பவேண்டாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Also Read
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்! : முழு விவரம் உள்ளே!
-
சுப்ரியா சாகு IAS-க்கு ‘Champions Of The Earth’ விருது: “தமிழ்நாடு பெருமை கொள்கிறது!” - முதலமைச்சர்!
-
“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
14 வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025 நிறைவு! : பதக்கம் வென்றது ஜெர்மனி!
-
இம்பீச்மெண்ட் நோட்டீஸ்: “நீதிபதி GR சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்..” - தொல்.திருமாவளவன்!