India

கொல்கத்தா மருத்துவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு: நாடு முழுவதும் மருத்துவர்கள் ஸ்டிரைக்! 

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி பணியில் இருந்த 2 பயிற்சி மருத்துவர்கள் மீது, உயிரிழந்த நோயாளியின் உறவினர் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் உள்ள பல மருத்துவமனையில் மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இப்போராட்டத்துக்கு பின்னணியாக பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸ்ஸும் செயல்படுகிறது என குற்றஞ்சாட்டிய அவர், அரசியல் நோக்கங்களுக்காக மக்களின் உயிரோடு விளையாடுவதை வேடிக்கை பார்க்க முடியாது என எச்சரித்துள்ளார்.

இந்நிலையில், கொல்கத்தா மருத்துவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று ஒருநாள் நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சிசிச்சை பெற வரும் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதற்கிடையில், மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் இளைநிலை மருத்துவர்கள் இன்று மாலை பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.