India
மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்படும் - மம்தா பானர்ஜி உறுதி !
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரியில் கடந்த திங்கள் கிழமை நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் நோயாளியின் உறவினர் ஒருவர் இளம் மருத்துவர் ஒருவரை தாக்கியுள்ளார்.
இதனையடுத்து மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மருத்துவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும் மேற்குவங்க மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஜூனியர் மருத்துவர்களை நேரில் சந்தித்த மம்தா பானர்ஜி, பணிக்கு திரும்புமாறு வலியுறுத்தினார். எனினும், மருத்துவர்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், தங்களுக்கு நியாயம் வேண்டும்' என குரல் எழுப்பி, போராட்டத்தை கைவிட மறுத்தனர்.
கொல்கத்தா மருத்துவர்களுக்கு ஆதரவாக, டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், ஜெய்ப்பூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட ஏராளமான மாநிலங்களை சேர்ந்த மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்பதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, மருத்துவ சேவைக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான மக்களை கருத்தில் கொண்டு அனைத்து மருத்துவர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்க தயாராக உள்ளதாக கூறியுள்ள மம்தா, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முன்வருமாறு மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் பேசிய மம்தா நோயாளியின் உறவினர்களால் தாக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர்களின் அனைத்து செலவுகளையும், அரசே ஏற்று கொள்ளும். போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்களிடம் பேச்சு நடத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழு தயாராக உள்ளது எனவே அரசியல் அமைப்புக்கு மரியாதை கொடுத்து அரசுடனான பேச்சுவார்த்தைக்கு, மருத்துவர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதன்மூலம், கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்றுவந்த போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
Also Read
- 
	    
	      முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !
- 
	    
	      ஜெமிமா ரோட்ரிக்ஸ் : இந்துத்துவ அமைப்பினரால் விமர்சிக்கப்பட்டு, இன்று இந்தியாவே கொண்டாடும் சிங்கப்பெண் !
- 
	    
	      பிரதமர் மோடி தனது அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்- முதலமைச்சர் விமர்சனம்!
- 
	    
	      "தமிழ்நாட்டை நாசப்படுத்தத் திட்டமிடும் கூட்டத்தை வேரடி மண்ணோடு வீழ்த்த வேண்டும்" - முரசொலி அறைகூவல் !
- 
	    
	      ”நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்!” - ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தல்!