India
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்தியர் யார் தெரியுமா?
ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை அதிக வருமானம் ஈட்டும் 100 விளையாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஒரே இந்தியராக இந்திய அணி கேப்டன் கோலி இடம்பெற்றுள்ளார். இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளோரில் ஒரே இந்தியரும், ஒரே கிரிக்கெட் வீரரும் கோலி மட்டுமே.
ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் 100-வது இடத்தைப் பிடித்துள்ளார் கோலி. விளம்பரங்கள் மூலமாக 21 மில்லியன் டாலரும், சம்பளமாக 4 மில்லியன் டாலரும் சேர்த்து விராட் கோலி, ஆண்டுக்கு 25 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் அதிக வருமானம் ஈட்டுவோரில் முதல் மூன்று இடங்களையும் கால்பந்து வீரர்களே பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதிகம் வருமானம் ஈட்டும் வீரராக அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி உள்ளார். அவர் 127 மில்லியன் டாலரை வருமானமாக ஈட்டுகிறார்.
இரண்டாம் இடத்தில் போர்ச்சுக்கல் கேப்டன் ரொனால்டோவும், மூன்றாவது இடத்தில் பிரேசில் கால்பந்து வீரர் நெய்மாரும் உள்ளனர். இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே பெண் செரினா வில்லியம்ஸ் மட்டுமே. அவர் இந்தப் பட்டியலில் 63-வது இடத்தைப் பெற்றுள்ளார்.
Also Read
-
“இனி நாம் என்ன பண்ணணும்?” : ‘உடன்பிறப்பின் குரல்’ இணையதளம் தொடங்கி கருத்து கேட்கும் கழக தலைவர்!
-
“குதிரை பேரம் குறித்து முதல்வர் விஜய் மறுப்பு தெரிவிக்காதது ஏன்?” : திமுக எம்.பி வில்சன் காட்டம் !
-
கஞ்சா போதையில் கும்பல் தாக்குதல்: நண்பனை காப்பாற்றச் சென்ற இளைஞர் படுகொலை - பதைபதைக்கும் தூத்துக்குடி!
-
அரசின் அனுமதி வாங்கி தருவதாக பண மோசடி.. தவெக பிரமுகர் அதிரடி கைது!
-
“லிஃப்ட்” தருவதாக கூறி 40 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு... திருவள்ளூரில் நடந்த பகீர் சம்பவம்!