India

வங்கியில் இருந்து 10 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்தால் வரி விதிக்க மத்திய அரசு திட்டம்!

ஆண்டுக்கு பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கிக் கணக்கில் இருந்து வாடிக்கையாளர் ரொக்கமாக எடுத்தால் அதற்கு வரி விதிக்கப்படுவதற்காக மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

வரி விதிப்பு அமலுக்கு வந்தால் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

NEFT மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு வங்கிகளுக்கு விதித்த கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏ.டி.எம்களில் பணம் எடுக்க வங்கிகள் விதிக்கும் கட்டணம் குறித்தும் மறு பரிசீலனை செய்ய நிபுணர் குழு அமைக்கவிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் 10 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பணம் எடுத்தால் வரி விதிக்கப்படும் எனும் திட்டம் எதிர்வரும் மத்திய பட்ஜெட்டின் மூலம் அமல்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.