India
கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு - கேரள அமைச்சர் சைலஜா உறுதி
கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டை போல், இம்முறையும் நிபா வைரஸ் தாக்குதல் அதிகரித்திருக்கிறது. நிபா வைரஸ் அறிகுறியுடன் 86 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 22 பேர் கல்லூரி மாணவர்கள் என தெரியவந்திருக்கிறது.
டெரோபஸ் எனும் வகையைச் சேர்ந்த பழந்தின்னி வெளவால்களால் பரவும் இந்த நிபா வைரஸால் கடந்த ஆண்டு கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் 17 பேர் பலியாகினர்.
அதேப்போல், இந்த ஆண்டும் கேரளாவில் பரவலாக இந்த நிபா வைரஸ் பரவி வருகிறது. இந்த நிலையில், எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர், இளைஞரின் ரத்த மாதிரிகளை புனேவில் உள்ள வைராலஜி துறை அனுப்பப்பட்டு சோதனை செய்யப்பட்டதில், அவருக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த இளைஞருக்கு சிகிச்சை அளித்த செவிலியருக்கும் நிபா வைரஸ் தாக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா, கேரளாவில் நிபா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிபா வைரஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நிபா வைரஸ் குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் அமைச்சர் சைலஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
Also Read
-
“Computer Expert பழனிசாமியின் கனவு பலிக்காது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை!
-
#VBGRAMG - மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம் : எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
நாடு முழுவதும் எத்தனை தபால் அலுவலகங்கள் மூடப்பட்டன? : நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு MP கேள்வி!
-
அமெரிக்க வரிவிதிப்பு : விரைவில் தீர்வு காண வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
காந்தியின் ராமராஜ்யமும், பா.ஜ.கவின் வதை ராஜ்யமும் : தெள்ளத் தெளிவாக விளக்கிய முரசொலி!