India
“உ.பி. இடைத்தேர்தலில் சமாஜ்வாதியும் தனித்து போட்டியிடும்” : அகிலேஷ் யாதவ்
மக்களவைத் தேர்தலில் எதிர்ப்பார்த்த வெற்றியை எட்ட முடியாததால், உத்தர பிரதேச மாநிலத்தில் கூட்டணி வைத்து போட்டியிட்ட பகுஜன் சமாஜும், சமாஜ்வாதியும் தற்போது சிதறியுள்ளது.
பல ஆண்டுகளாக பரஸ்பர குற்றச்சாட்டுகளை வைத்திருந்த பகுஜன் சமாஜும், சமாஜ்வாதி கட்சியும் நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்டது. உத்தரபிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி 38, 37 தொகுதிகள் முறையே பிரித்து தேர்தலில் களம் கண்டது.
ஆனால் இவ்விரு கட்சிகளும் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. மாயாவதியின் பி.எஸ்.பி. 10 தொகுதிகளிலும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி 5 தொகுதிகளிலுமே வெற்றி பெற்றுள்ளது.
இதனால், ஆழ்ந்த அதிருப்தியில் இருந்த மாயாவதி, அகிலேஷ் கட்சியுடனான கூட்டணியில் இருந்து பிரிந்தார்.
அது மட்டுமில்லாமல் லோக்சபா தேர்தலில் தோல்வியுற்றதற்கு அகிலேஷ் யாதவ் தான் காரணம் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், உத்தர பிரதேசத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தனித்தே போட்டியிடப்போவதாகவும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, கூட்டணி இல்லையென்றாலும் பரவாயில்லை. சட்டமன்ற இடைத்தேர்தலில் சமாஜ்வாதியும் தனித்தே போட்டியிடும். மேலும், மாயாவதியின் பேச்சு மற்றும் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.
Also Read
-
ரூ.80.62 கோடி செலவில்... ஆவின் நிறுவனத்தின் சார்பில் முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு... - விவரம்!
-
ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கு ரூ.2000 பொங்கல் கருணைத்தொகை.. வழங்கினார் முதலமைச்சர்!
-
மஹாராஷ்டிராவிலும் பிரிவினை ஏற்படுத்த நினைத்த அண்ணாமலை... தக்க பதிலடி கொடுத்த அரசியல் கட்சிகள்!
-
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஆல்ரவுண்டர்... அணி நிர்வாகம் இவரைத்தான் தேர்ந்தெடுத்துள்ளதா?
-
50 திருநங்கையர்களுக்கு ஊர்க்காவல்படை உறுப்பினர் நியமன ஆணை! : முதலமைச்சர் வழங்கினார்!