India
தபோல்கர் கொலை வழக்கில் இந்துத்வ பயங்கரவாதிகள் கைது!
புனேவைச் சேர்ந்த மருத்துவரும், எழுத்தாளருமான நரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் தொடர்புடைய சஞ்சீவ் புனலேகர் மற்றும் விக்ரம் பவே ஆகியோரைக் கைது செய்துள்ளது சிபிஐ.
முற்போக்குவாதி நரேந்தர் தபோல்கர் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புனேவில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது இந்துத்வ பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ புனலேகர் மற்றும் விக்ரம் பவே ஆகியோரைக் கைது செய்துள்ளது.
சஞ்சீவ் புனலேகர் வலதுசாரி அமைப்பான சனாதன் சன்ஸ்தாவின் ஆலோசகராகச் செயல்பட்டு வருகிறார். இவர் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவரும், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போபால் தொகுதியில் நின்று வென்றவருமான பிரக்யா சிங் தாக்கூருக்காக வாதாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட விக்ரம் பவே, சனாதான் சன்ஸ்தா உறுப்பினர் ஆவார். இவரும் பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர். தபோல்கர் கொலை வழக்கில் ஏற்கெனவே சனாதான் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த விரேந்திர சிங் தவாடே சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ஒரே ஆண்டில் 17,702 பேருக்கு அரசு வேலை : சாதனை படைத்த TNPSC!
-
”பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் புகழ் தமிழுள்ள வரை போற்றப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
-
GST வரி செலுத்துவோரின் சுமை எப்படி குறையும்? இதில் என்ன பெருமை இருக்கிறது?: மோடி அரசுக்கு முரசொலி கேள்வி!
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!