India

அடுத்த பிரதமர் யார்? ஆட்சி மாறுமா தமிழகத்தில்? - துல்லியமான தகவலுக்கு இணைந்திருங்கள்!

இந்தியாவில், கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தல் தேர்தல் மே 19 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் வேலூர் தொகுயை தவிர மற்ற 38 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18 ஆம் நாள் நடைப்பெற்றது. அன்றே 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. மேலும் கடந்த மே 19 ஆம் தேதி மீதமுள்ள நான்கு சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்து முடிந்தது.

நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர்த்து 542 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (மே 23) நடைபெற உள்ளது.

தமிழகம் முழுவதும் 43 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.தமிழகம் முழுவதும் ஓட்டு எண்ணிக்கைக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பதட்டமான வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் துணை ராணுவ படையினர், மாநில போலீசார், சிறப்பு படை போலீசார் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தபால் ஓட்டுகளும் மின்னணு எந்திரங்களில் பதிவான ஓட்டுகளும் ஒரே நேரத்தில் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் முடிவுகள் மற்றும் முன்னிலை நிலவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கலைஞர் செய்திகளுடன் இணைந்திருங்கள். https://www.kalaignarseithigal.com/election2019