India
மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனான சுனில் அரோராவின் ஆலோசனை ரத்து!
நாடாளுமன்றத் தேர்தலுக்கான 7 கட்ட வாக்குப்பதிவு மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் மே 19ம் தேதியோடு நடந்து முடிந்தன.
இதனையடுத்து, நாளை நாடுமுழுவதும் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது. தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெற இருக்கிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனையடுத்து, தமிழகம் உள்ளிட்ட 10 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனை நடத்த இருந்தார்.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை குறித்து 10 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் சுனில் அரோரா நடந்த இருந்த ஆலோசனைக் கூட்டம் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது; தேவைப்பட்டால்...” : உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!
-
பாரதிதாசன் விவகாரம் : “பொய் சொல்வதை அமைச்சர் வன்னி அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்” - கோவி.செழியன் பதிலடி!
-
“தலைமை நீதிபதி அவமதிப்பு.. முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்” : வழக்கறிஞர் வில்சன் எம்.பி!
-
“கல்வி உதவித்தொகை வழங்க இவ்வளவு கெடுபிடிகள் ஏன்?” : த.வெ.க அரசுக்கு கனிமொழி எம்.பி கேள்வி!
-
“உரிய முறையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” : அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு கடிதம்!