India
மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை !
மக்களவைத் தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் மே 23-ம் தேதி எண்ணப்படுகின்றன. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று காணொலி காட்சி மூலமாக, அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை தலைமை தேர்தல் ஆணையர் வழங்கினார்.
Also Read
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!