India
பாஜக தலைவரின் பொய் குற்றச்சாட்டு-வீட்டு முன்பு கட்டுக்கட்டாக ஆவணங்களைக் குவித்த காங்கிரஸ்!
மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில் காங்கிரஸ் கட்சி விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை எனக் கூறி வருகிறார்.
காங்கிரஸ் மீதான பொய்க் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசும் பா.ஜ.க-வினருக்கு எதிராக ஆதாரங்களை எடுத்து வைத்து பதிலடி கொடுத்துள்ளனர் காங்கிரஸ் கட்சியினர்.
சிவராஜ் சிங் சவுகானின் பேச்சு பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சுரேஷ் பச்சவ்ரி, மாநில அமைச்சர் பி.சி.சர்மா ஆகியோர், கமல்நாத் தலைமையிலான மத்திய பிரதேச அரசு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்த ஆவணங்களை கட்டுக்கட்டாக தூக்கி வந்து சிவராஜ் சிங் சவுகான் வீட்டிற்கு முன்பு குவித்தனர்.
டிசம்பர் 2018-ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது முதல் 21 லட்சம் விவசாயிகளின் வங்கிக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட ஆவணங்களை இரண்டு வாகனங்களில் வைத்து சிவராஜ் சிங் சவுகான் வீட்டுக்கு முன்பு பார்வைக்கு வைத்து பதிலடி கொடுத்துள்ளனர்.
Also Read
-
வந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு இன்று 386-வது பிறந்த நாள்!
-
"வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும்" - உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
”விஜயின் தராதரம் அவ்வளவுதான்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
இளைஞர்கள் சுயதொழில் தொடங்க மானியம் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சொன்ன மகிழ்ச்சி செய்தி என்ன?
-
”சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!