India

மோடி பிரச்சாரத்திற்காக குடியிருப்புகள் இடித்து தரைமட்டம்: ராஜஸ்தானில் அராஜகம்!

பிரதமர் மோடியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கும் இடங்களில் பாதுகாப்பை காரணம் காட்டி 300க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ள அராஜக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர், வி.டி.சாலை அருகில் உள்ள திடல் மோடியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டது. அப்பகுதியில் மக்கள் சிறு சிறு குடிசை வீடுகளில் வசித்துவருகின்றனர். அந்த பகுதியில் மோடியின் பிரச்சாரக்கூட்டம் நடைபெறுவதால் குடிசையில் வசிப்பவர்கள் வெளியேறும் படி காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர். அவர்களுக்கு மாற்று இடமும் வழங்கப்படவில்லை. மக்களும் செல்வதற்கு வழியின்றி தவித்துவந்துள்ளனர்.

இந்த சூழலில் அவர்களில் பலர் வெளியேறமுடியாத நிலையில் அவர்கள் வீடுகளை புல்டோசர் மூலமாக அப்புறப் படுத்தியுள்ளனர். சிலருடைய பொருட்கள் மட்டுமே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. பலர் தங்களின் உடமைகளை இழந்து தவித்து வருகினறனர். பிறகு அவர்கள் பொருட்களை சாலையின் ஓரமாக வைத்துள்ள அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்த அப்பகுதியில் வசித்த பெண் ஒருவர் பேசும் போது, ” குடியிருக்க மாற்று இடமில்லை. சாலை ஓரங்களில் வசிப்பவர்கள் என்பதற்காக குப்பை மேட்டில் வசிக்க முடியாது. குப்பை கூழங்கள் நிறைந்து, மிகவும் சுகதாரமற்ற பகுதியாக இந்த இடம் உள்ளது. உணவு சமைக்ககூட முடியாமல் அவதிப்படுகிறோம். பாத்திரங்கள் எல்லாம் துர்நாற்றம் வீசத் தொடங்கிவிட்டன. உணவு சமைத்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது” என அவர் தெரிவித்தார்.

ஏழை மக்களை நடுத்தெருவில் நிர்கதியாக தவிக்க வைத்துவிட்டு, தான் மோடி சொல்கிறார், பா.ஜ.க ஏழைகளுக்கான கட்சி என்று

நன்றி: The Wire