India

ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக அயோத்தி செல்லும் பிரதமர் மோடி ? 

பிரதமர் மோடி இன்று உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 374 தொகுதிகளில் 4 கட்ட வாக்குப்பதிவுகள் நடந்துமுடிந்துள்ளது. தற்போழுதுவரை மொத்தமாக 64% வாக்குகள் பதிவாகி உள்ளது.

இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி அயோத்திக்கு இன்று முதன்முறை செல்கிறார். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போதும் அயோத்தி மாவட்டத்திற்கு வந்தார். ஆனால் அப்போதும் கூட நகருக்கு செல்லவில்லை. தற்போது அயோத்தியில் இருந்து 27 கிலோமீட்டர் தூரமுள்ள மாயாபஜார் எனுமிடத்தில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இப்பிரச்சாரத்தில் லக்னோ, பைசாபாத் உள்ளிட்ட தொகுதி வேட்பாளர்களுக்கும் பிரதமர் வாக்குச் சேகரிக்க உள்ளார்.

அயோத்தியின் தற்காலிகமான ராமர் கோவிலுக்கு பிரதமர் வருவாரா என்ற பலர் கேள்வியெழுப்பியுள்ளார். இந்த கேள்விக்கு பாஜக வினரிடமிருந்து எந்த பதில் இல்லை. இதனிடையே எதிர்க்கட்சியினரான மாயாவதியும் அகிலேஷ் யாதவும் இன்று அயோத்தியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.