India
புற்றுநோயை ‘கோமியம்’ குணப்படுத்தியதா? - பிரக்யா தாகூர் பொய் பரப்புரை செய்தது அம்பலம்!
மஹாராஷ்டிர மாநிலம் போபால் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராகப் போட்டியிடும் பிரக்யா சிங் தாகூர் சில நாட்களுக்கு முன்னர், மாட்டின் சிறுநீர் தான் தனக்கிருந்த புற்றுநோயை குணப்படுத்தியது எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அறுவை சிகிச்சை செய்து புற்றுக்கட்டி நீக்கப்பட்டதால் தான் பிரக்யா சிங் தாகூர் குணமடைந்தார் என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவரே தெரிவித்துள்ளதால், பிரக்யா தாகூர் பொய் பரப்புரையில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது.
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யா தாகூர் தான் போபால் தொகுதியில் பா.ஜ.க-வின் வேட்பாளர். இவர் சில நாட்களுக்கு முன்னர், தனக்கு மார்பக புற்றுநோய் இருந்ததாகவும், மாட்டின் சிறுநீர் பயன்படுத்தியதால் அதன் மருத்துவ குணத்தால் புற்றுநோய் குணமடைந்ததாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், அவருக்கு சிகிச்சையளித்த ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜ்புத், "பிரக்யா தாகூர் கடந்த 2008-ஆம் ஆண்டு ஆரம்பகட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அப்போது கட்டியின் நிலை தெளிவற்றதாக இருந்தது. 2012-ஆம் ஆண்டு அவருக்கு அறுவைசிகிச்சை செய்து கட்டி நீக்கப்பட்டது.
பிறகு இரண்டாவது அறுவை சிகிச்சையும் நடைபெற்றது. பின்னர் 2017-ஆம் ஆண்டு மூன்றாவது அறுவை சிகிச்சை நடந்தபோது அவரின் மார்பகங்கள் நீக்கப்பட்டதாகவும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அவர் வந்ததாகவும் தெரிவித்துள்ளார் ராஜ்புத்.
இதன்மூலம், மக்களை மூடநம்பிக்கை மூலம் பிரக்யா தாகூர் ஏமாற்ற நினைத்தது அம்பலமாகியுள்ளது.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!