India

99 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு 0 மதிப்பெண்: 7 நாளில் 21 மாணவர்கள் தற்கொலை!

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த வாரம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் பல குளறுபடிகள் உள்ளதாக மாநிலம் முழுவதும் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கஜ்ஜா நவ்யா மாணவி 11-ம் வகுப்பு படிக்கும்போது தெலுங்குப் பாடத்தில் 98 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆனால், தற்போது 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் அவருக்கு `0’ மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதானல் மாணவி விரத்தியில் தற்கொலை செய்துகொண்டார். பின்னர் நவ்யாவின் தெலுங்கு தாள் மறு மதிப்பீட்டில் அவர் 99 மதிப்பெண்கள் பெற்றிருந்தது தெரியவந்துள்ளது. மேலும் தேர்வு எழுதிய மாணவர்கள் அன்றைய தினம் விடுப்பு எடுத்துவிட்டதாகவும் பதிவு செய்துள்ளனர்.

தெலங்கானாவில் பொதுத் தேர்வு பணிகளை க்ளோபியர்னா டெக்னாலஜி என்ற தனியார் நிறுவனத்திடம் அரசு வழங்கியது. ஏப்ரல் 18ம் தேதி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் தேர்வு எழுதிய 9.74 லட்சம் மாணவ – மாணவியர்களில் 3.28 லட்சம் பேர் தேர்வில் தோல்வி அடைந்ததாக முடிவுகள் வெளிவந்தனர். இந்த மாணவர்களில் 21 பேர் தேர்வில் தோல்வி அடைந்த விரத்தியில் தற்கொலை செய்துகொண்டனர். மேலும் ஆயிரக்கான மாணவர்கள் மனவேதனையும் அடைந்துள்ளனர்.

தனியார் நிறுவனத்தின் அலட்சியத்தால் தற்போதுவரை 21 மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டதை அடுத்து மாணவர்கள் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்இந்த குளறுபடிக்கு இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து அறிக்கை அளிக்கத் தெலுங்கானா அரசு 3 பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்துள்ளது. அந்த குழு அளித்துள்ள அறிக்கையில், மாணவர்களின் வினாத்தாள் மதிப்பீட்டின்போது அதிக கவனக்குறைவு நடைபெற்றுள்ளதாகவும், ஆசிரியர்களின் தவறுகள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறு இருந்துள்ளதே இதற்கு முக்கியக்காரணம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் தெலங்கானா கல்வித் துறைச் செயலர் ஜனார்தன் ரெட்டி கூறுகையில், தெலுங்கானா அரசு நியமித்த தனியார் நிறுவனத்தின் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் இதற்குக் காரணமான ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

உயிரிழந்த திவ்யாவின் தேர்வுத்தாளை மதிப்பீடு செய்த தனியார் பள்ளி ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.