India
மோசடியால் பாதிக்கப்பட்டோருக்கு, ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் தீர்வு - காங்கிரஸ் அறிக்கை!
'காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 'பியர்ல்ஸ் சிட்பண்ட்' மோசடியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரப்படும்' என காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'பியர்ல்ஸ் அக்ரோடெக் கார்ப்பரேஷன்' என்ற தனியார் நிதி நிறுவனம் நாடு முழுவதும் மக்களிடம் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த நிறுவனம் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், பா.ஜ.க அரசு மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் முதலீடுகள் வட்டியுடன் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் சார்பில் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ 'பியர்ல்ஸ் சிட்பண்ட்' மோசடியால் நாடு முழுவதும் 5.85 கோடி குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்தியில் காங்கிரஸ் மீண்டும் அமைந்ததும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மூன்று மாதங்களுக்குள் அவர்கள் முதலீடுகளை வட்டியுடன் திரும்பப் பெற்றுத் தர கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“ஆளும்கட்சியின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
கொலை நகரான தலைநகரம் : சென்னை தியாகராயநகரில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள்!
-
கோவையில் அத்துமீறல்: காவல் நிலையத்தையும் விட்டுவைக்காத த.வெ.க.வினரின் விளம்பர மோகம்!
-
இதைக்கூட சரி செய்ய துப்பு இல்லாமல் எதற்கு முதலமைச்சர் நாற்காலி : முரசொலி கடும் தாக்கு!
-
“ரீல்ஸ் முதலமைச்சரே... அடக்குமுறைக்கு கழக இளைஞர்கள் அஞ்சமாட்டார்கள்!” : தி.மு.க இளைஞர் அணி கண்டனம்!