India
“மோடி, கார்ப்பரேட் பணக்காரர்களின் வீட்டு வாசலில் தான் காவல் நிற்கிறார்” - சித்து விளாசல்!
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் மாநில அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து, டெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, பா.ஜ.க அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
“பா.ஜ.க அரசு பொதுத்துறை நிறுவனங்களைக் காட்டிலும் தனியார் தொழில் நிறுவனங்கள் மீதே அதீத அக்கறை செலுத்துகிறது.” எனக் குற்றம் சாட்டியுள்ளார் சித்து.
மேலும், “தேசத்தின் காவலன் என்று மார்தட்டிக் கொள்ளும் பிரதமர் மோடி, கார்ப்பரேட் பணக்காரர்களின் வீட்டு வாசலில் தான் காவல் நிற்கிறார். அம்பானி, அதானி போன்ற தொழிலதிபர்களுடன் 55 நாடுகளுக்குச் சென்றிருக்கும் மோடி அவர்களது நிறுவனங்களுக்காகவே உழைக்கிறார்.” என்றார்.
மேலும் பேசிய அவர் “தான் ஒரு தேசபக்தர் எனக் கூறிக்கொள்ளும் மோடி பொதுத்துறை நிறுவனங்களை சிதைத்து வருகிறார். தனியார் நிறுவனங்களை வாழ வைக்கிறார். BHEL, BSNL உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கும்போது ரிலையன்ஸ் நிறுவனம் தனது காலாண்டு வருமானத்தை ரூ.10,000 கோடி எனத் தெரிவிக்கிறது.
மோடி இந்த நாட்டின் பிரதமரா இல்லை அம்பானிக்கும், அதானிக்குமான தொழில் மேம்பாட்டு மேனேஜரா என்று தெரியவில்லை" என பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
Also Read
-
சென்னையில் 65 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: த.வெ.க இளைஞரணி நிர்வாகி கைது!
-
மின்வெட்டே கிடையாதென தமிழ்நாட்டு மக்கள் காதில் பூ சுற்றும் தவெகவின் மெகாவாட் பொய்கள் : முரசொலி தலையங்கம்!
-
வாக்களித்த மக்களுக்கு கைக்கொடுக்க இவ்வளவு தயக்கம் ஏன்? - முதலமைச்சரின் சர்ச்சை செயலுக்கு எழும் கண்டனம்!
-
அதிரடியாக ஜாகீர் கானை இறக்கிய சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் மைண்ட்.. இதுதான் ரகசியம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!
-
உயிரைக் காக்கும் மருந்தா? விளம்பரத்திற்கு பயன்படும் மோதிரமா? : த.வெ.க.வை நோக்கி எழும் கேள்விகள்!