India
பா.ஜ.க ஆளும் திரிபுராவில் நாடாளுமன்றத் தேர்தல் ஒத்திவைப்பு!
நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப்.,18) தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் வேலூர் மக்களவைத் தொகுதியின் தேர்தலை ரத்து செய்ததால், தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கு மட்டும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதேபோல், பா.ஜ.க. ஆளும் திரிபுரா மாநிலத்தின் கிழக்கு மக்களவைத் தொகுதிக்கான தேர்தலை ஏப்ரல் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது தேர்தல் ஆணையம்.
திரிபுரா மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு அச்சுறுத்தல் உள்ளதால் கிழக்கு பகுதியில் தேர்தல் நடத்துவதற்கான கள நிலவரங்கள் ஏதுவாக இல்லாததால் தேர்தல் அதிகாரி - சிறப்பு காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை ஏற்று தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு தேதியை 23-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இதற்கிடையில், திரிபுராவின் மேற்கு பகுதியில் கடந்த 11-ம் தேதி நடந்த வாக்குப்பதிவில் குளறுபடிகள் நடந்ததாகவும், 464 வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடத்தவும் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
எரிசக்தி திறனிலும் நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு!: ஒன்றிய அரசு வெளியிட்ட SEEI குறியீட்டில் தெரிவிப்பது என்ன?
-
“பிரதமர் மோடியின் ‘கபட நாடகம்’ அடங்கிய உரை!” : ஜெய்ராம் ரமேஷ் எம்.பி கண்டனம்!
-
“இவை தீர்மானங்கள் மட்டுமல்ல! ஒன்றிய பா.ஜ.க அரசின் மீதான குற்றப்பத்திரிக்கை!” : முரசொலி தலையங்கம்!
-
“SIR பணிக்கு ஒரு வார கால நீட்டிப்பு என்பது திமுக-வின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!” : என்.ஆர்.இளங்கோ!
-
சிவகங்கை பேருந்து விபத்து! : ஆறுதல் மற்றும் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!