DMK Government
டெபாசிட் இழந்தார் பிரேமலதா விஜயகாந்த்.. தொடர்ந்து தோல்வியை தழுவும் தே.மு.தி.க - கட்சியை கலைக்க முடிவா?
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க ஆட்சி அமைகிறது.
இந்த தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தி.மு.க போட்டியிட்ட 174 வேட்பாளர்களில் 127 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தில் ஆட்சி அமைக்க 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. தற்போது தி.மு.கவினர் மட்டுமே 130 பேர் வெற்றி பெற்றுள்ளதால் தி.மு.க தனி மெஜாரிட்டி பெற்றுள்ளது.
இதன்மூலம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்க உள்ளார். தி.மு.க கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 16, ம.தி.மு.க 4, வி.சி.க, 4, சி.பி.எம் 2, சி.பி.ஐ, 2, கொ.ம.தே.க. 1 என்ற சீட் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் தி.மு.கவை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் டெபாசிட்டை இழந்தனர்.
அந்தவகையில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் டெபாசிட் இழந்தார். அ.தி.மு.க, ம.நீ.ம உள்ளிட்ட கட்சிகளும் பேரம் பேசி கடைசியாக உடன்பாடு எட்டப்படாத நிலையில், அமமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தேமுதிக படுதோல்வி அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டப்பேரவை தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் பாமக வேட்பாளர் ஜெ.கார்த்திகேயன், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன், தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றார். இரண்டாவது இடத்தில் பாமக வேட்பாளர் வந்த நிலையில் 3 ஆவது இடத்தில் தான் பிரேமலதா விஜயகாந்த் இருந்தார். இறுதியில், காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். பாமக இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
அ.தி.மு.க, ம.நீ.ம உள்ளிட்ட கட்சிகளும் பேரம் பேசி கடைசியாக உடன்பாடு எட்டப்படாத நிலையில், அமமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தேமுதிக படுதோல்வி அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டப்பேரவை தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் பாமக வேட்பாளர் ஜெ.கார்த்திகேயன், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன், தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை பெற்றார். இரண்டாவது இடத்தில் பாமக வேட்பாளர் வந்த நிலையில் 3 ஆவது இடத்தில் தான் பிரேமலதா விஜயகாந்த் இருந்தார். இறுதியில், காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். பா.ம.க இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
விருத்தாசலத்தில் மொத்தம் 1,94,723 ஓட்டுகள் பதிவாகியிருந்தன. பதிவான ஓட்டுகளில், 6 ஒரு பங்கு ஓட்டு பெற்றால் டெபாசிட் பெற்றதாக அறிவிக்கப்படுவார். இதன்படி, பிரேமலதா 32 ஆயிரத்து 788 ஓட்டுகள் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவர் 25,908 ஓட்டுகள் மட்டுமே பெற்றதால் அங்கு டெபாசிட் இழந்தார்.
முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது, தே.மு.தி.க இல்லாமல் தமிழகத்தில் எந்த கட்சியும் ஆட்சியை பிடிக்க முடியாது என சவால் விடுத்த பிரேமலதா டெபாசிட் இழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தோல்வியை தழுவி வருவதால், கட்சியை கலைக்கும் நிலைக்கு தே.மு.தி.க சென்றுள்ளதாக கூறப்பட்டுகிறது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!