DMK Government
Results2021: கருகும் இலை.. வாடும் தாமரை - மண்ணைக் கவ்வும் OPS, ராஜேந்திர பாலாஜி, பாண்டியராஜன், ஜெயகுமார்!
தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான சட்டமன்றப் பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெகுமக்களின் அமோக ஆதரவுடன் தேர்தலைச் சந்தித்தது.
வாக்குப்பதிவு நிறைவடைந்து 26 நாட்கள் ஆன நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பெரும்பான்மையான தொகுதிகளில் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்குகளுடன் முன்னணி வகித்து வருகின்றனர்.
பத்தாண்டுகால அ.தி.மு.க ஆட்சிக்கு எதிராக மக்களிடையே நிலவிய வெகுவான அதிருப்தியாலும், கட்சியையும் ஆட்சியையும் பா.ஜ.க-விடம் அடகு வைத்து மக்களின் கடுமையான எதிர்ப்பைச் சம்பாதித்திருப்பதாலும் அ.தி.மு.க படுதோல்வியடைந்திருப்பது தற்போதைய தேர்தல் முடிவுகளின் மூலம் திட்டவட்டமாகத் தெரியவருகிறது.
அ.தி.மு.க-வின் மூத்த அமைச்சர்கள் பலரும், அ.தி.மு.க கூட்டணியின் முக்கிய வேட்பாளர்களும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை விட குறைவான வாக்குகளைப் பெற்று தோல்வி முகம் கண்டு வருகிறார்கள்.
விழுப்புரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் சி.வி.சண்முகத்தை விட 212 வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் ஆர்.லட்சுமணன் பெற்றுள்ளார்!
ராஜபாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை விட 1909 வாக்குகள் அதிகம் பெற்று திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் பெற்றுள்ளார்!
இராயபுரம் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் ஜெயக்குமாரை விட 702 வாக்குகள் அதிகம் பெற்று தி.மு.க வேட்பாளர் இரா.மூர்த்தி முன்னிலை!
ஆவடி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் அமைச்சர் பாண்டியராஜனை விட 4009 வாக்குகள் அதிகம் பெற்று தி.மு.க வேட்பாளர் சா.மு.நாசர் முன்னிலை!
அரவக்குறிச்சி தொகுதியில் தி.மு.க வேட்பாளர் ஆர்.இளங்கோ, எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலையை விட 600 வாக்குகள் பெற்று முன்னிலை!
ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.க வேட்பாளர் மருத்துவர் எழிலன், பா.ஜ.க வேட்பாளர் குஷ்புவை விட 1973 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை!
சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியைவிட 424 வாக்குகள் அதிகம் பெற்று தி.மு.க வேட்பாளர் மா.சுப்பிரமணியன் முன்னிலை பெற்றுள்ளார்.
போடி தொகுதியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பின்னடைவு. தி.மு.க வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலை வகிக்கிறார்.
Also Read
-
"அதானி, அம்பானிக்கு செய்ததை போல திருப்பூர்,கோவையைக் காப்பாற்ற மோடி செய்தது என்ன?" - முரசொலி கேள்வி !
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!