DMK Government
சட்டசபை தேர்தல் முடிவுகள் 2021: பெரும்பான்மையுடன் அமைகிறது தி.மு.க ஆட்சி... முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான சட்டமன்றப் பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெகுமக்களின் அமோக ஆதரவுடன் தேர்தலைச் சந்தித்தது.
வாக்குப்பதிவு நிறைவடைந்து 26 நாட்கள் ஆன நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பெரும்பான்மையான தொகுதிகளில் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளனர். தி.மு.க தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்கத் தேவையான இடங்களில் வென்றுள்ளது.
பத்தாண்டுகால அ.தி.மு.க ஆட்சிக்கு எதிராக மக்களிடையே நிலவிய வெகுவான அதிருப்தியாலும், கட்சியையும் ஆட்சியையும் பா.ஜ.க-விடம் அடகு வைத்து மக்களின் கடுமையான எதிர்ப்பைச் சம்பாதித்திருப்பதாலும் அ.தி.மு.க படுதோல்வியடைந்திருப்பது தற்போதைய தேர்தல் முடிவுகளின் மூலம் திட்டவட்டமாகத் தெரியவருகிறது.
அ.தி.மு.க-வின் மூத்த அமைச்சர்கள் பலரும், அ.தி.மு.க கூட்டணியின் முக்கிய வேட்பாளர்களும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை விட குறைவான வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்துள்ளனர்.
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், 1,04,577 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளரைவிட 70,580 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார் மு.க.ஸ்டாலின்.
தி.மு.க கூட்டணி வேட்பாளர்களின் மகத்தான் வெற்றியைத் தொடர்ந்து, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவிருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
Also Read
-
“Online, Offline இண்டிலும் தி.மு.க தான் Lion என்று காட்டுவோம்!” : IT Wing கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு!
-
“அச்சுறுத்தல்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு பயப்பட மாட்டார்” : கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படைத்துள்ள “ததும்பும் தமிழ்ப் பெருமிதம்” நூல்!
-
எங்கள் சாதனைகளை நாங்களே விஞ்சும் அளவிற்கு திராவிட மாடல் 2.O அமையும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!