DMK Government
பா.ஜ.கவுக்கு முறைவாசல் செய்த மாஃபா : வீழ்த்திய தி.மு.கவின் ஆவடி நாசர்; பழிதீர்த்த தமிழகம் | DMK4TN
பா.ஜ.கவிலிருந்து தனது அரசியல் பயணத்தைத் துவங்கிய மாஃபா பாண்டியராஜன் தற்போது அ.தி.மு.க அமைச்சராக இருந்தாலும், பா.ஜ.க-வின் முழுநேர விசுவாசியாகவே செயல்பட்டு வருகிறார்.
இந்தி திணிப்பு, நீட் தேர்வு என்பன உள்ளிட்ட தமிழக மக்கள் நலனுக்கு எதிரான பா.ஜ.க-வின் கொள்கையைக் கடைபிடிப்பதில் அ.தி.மு.க அமைச்சர்களிலேயே இவருக்குத்தான் முதலிடம்.
பா.ஜ.க-வின் நேரடி ஊதுகுழலாகச் செயல்படும் மாஃபா பாண்டியராஜன் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆவடி தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் சா.மு.நாசர் போட்டியிட்டார்.
இந்த நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. அதில் தமிழகத்தில் அபாரமான வெற்றியை திராவிட முன்னேற்றக் கழகம் பதிவு செய்துள்ளது. பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் மக்களுக்கான அரசு ஆட்சிக்கட்டிலில் ஏறப்போவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படி இருக்கையில் ஆவடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அதிமுகவின் மாஃபா பாண்டியராஜன் 53,274 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் நாசரிடம் மண்ணைக் கவ்வினார்.
மத்திய மோடி அரசின் நீட் தேர்வுக்கு அதிமுக அரசு இசைந்துக் கொடுத்ததால் தன்னுடைய மருத்துவ கனவை தொடர முடியாமல் போன அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலையை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய மாஃபா பாண்டியராஜனுக்கு இந்த படுதோல்வி தக்க பாடத்தை கொடுத்துள்ளது.
மேலும், இணையவாசிகள் மாஃபா பாண்டியராஜனின் தோல்வியை கொண்டாடும் வகையிலும் கர்ணன் படத்தில் இடம்பெற்ற பேச்சியின் கதாபாத்திரத்தை அரியலூர் அனிதாவுடன் இணைத்து மீம்களாக வெளியிட்டு வருகின்றனர்.
முன்னதாக, எங்களின் சுவாசமே அம்மாதான் எனக் கூறிக்கொண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சடலமாக இருப்பது போன்ற பொம்மையை வைத்து அரசியல் செய்தவரும் இதே மாஃபா பாண்டியராஜன் தான் என்பதை மறவாத தமிழக மக்கள் உரிய சவுக்கடியை தேர்தலில் கொடுத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!