DMK Government

தேர்தல் முடிந்ததும் காணாமல் போன எடப்பாடி, ஷூட்டிங் போன கமல்: மக்களுக்காக களத்தில் நிற்கும் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிமுக அரசின் முடிவுகாலத்திற்கு இன்னும் வெகு சில நாட்களே உள்ளன. இருப்பினும் ஆட்சியில் இருந்த போதும் எதுவும் செய்யாதிருந்த ஆளும் தரப்பினர் தேர்தல் நேரம் வந்ததும் மக்களிடம் சென்று பற்பல திட்டங்களை நிறைவேற்றுவதாகக் கூறி வாக்கு சேகரித்தனர்.

அப்போது தங்கள் ஆட்சியில் செய்த சாதனைகளை பற்றி கூறாது, இம்முறை வாக்களித்தால் இதனைச் செய்வோம் என்று போன தேர்தலின் போது அரைத்த அதே மாவையே மீண்டும் நடந்து முடிந்த தேர்தலில் அரைத்து முடித்திருக்கிறார்கள். ஆனால் தேர்தல் முடிந்த அடுத்த நாளில் இருந்து ஆட்சியாளர்கள் எவரையும் காணவில்லை.

அதே போல் நாளை நமதே எனக் கூறிக்கொண்டு இட ஒதுக்கீட்டை பற்றி கேட்டால் வெறும் எட்டாம் கிளாஸ் படித்த என்னிடம் கேட்காதீர்கள் என்றுக் கூறி நழுவியோரும், தேர்தல் முடிந்த கையோடு அடுத்தகட்ட சினிமா வேலைகளை கவனிக்க பறந்துவிட்டனர்.

இப்படி இருக்கையில் அன்றும் இன்றும் என்றும் மக்கள் நலனுக்காக, மக்களை நசுக்கும் திட்டங்களை எதிர்க்க எப்போதும் முன்னின்று வந்து அதற்காக போராடும் ஒரே இயக்கமாக இருப்பது திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

அவ்வகையில், தேர்தல் முடிந்த கையோடு வெறும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சாவடிகளை மட்டுமே கண்காணிக்கும் பணிகளை மேற்கொள்ளாமல் காலத்தை கருத்தில்கொண்டு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மீண்டுன் ஒன்றிணைவோம் வா திட்டத்தை கையில் எடுக்க தி.மு.கழகத்தினருக்கு அறிவுறுத்தியிருக்கிறார் தலைவர் மு.க.ஸ்டாலின்.

Also Read: “நல்ல தீர்ப்பு நிச்சயம் வரும்; எனினும் மக்கள் நலன் காக்க ‘ஒன்றிணைவோம் வா’ருங்கள்” - மு.க.ஸ்டாலின் அறிவுரை

அதேபோல இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின், தேர்தல் பரப்புரையின் போது தனக்கு மிகவும் உதவிக்கரமாக இருந்தவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். தேர்தல் முடிந்ததும் பதுங்கிய எடப்பாடி வெளியே வரவில்லை. ஆனால் தி.மு.கழகத் தலைவர் இன்னமும் மக்கள் பணியே முதன்மையாக கொண்டிருக்கிறார்.

தமிழ் உலகிற்கு மிகப்பெரிய தொண்டாற்றிய பெரியாரிய தொண்டர் வே ஆனைமுத்து அய்யா மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். ஆனால் அரசுத் தரப்பில் இருந்து ஒரு இரங்கல் குறிப்பு கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தேர்தல் நேரத்து மோதல் சாதிய மோதலாக மாறி இரண்டு உயிர்களைப் பலி வாங்கிய நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த கட்சியினர் வாய் மூடி வேடிக்கை பார்க்கும் நிலையில் தி.மு.க தலைவர் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கண்டணம் தெரிவித்து வருகிறார்கள்.

Also Read: அரக்கோணம் அருகே சாதிய வன்மத்துடன் கொலையில் முடிந்த தேர்தல் மோதல்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!