DMK Government

தோல்வி பயத்தின் உச்சம்: பேருந்துகளை இயக்கவிடாமல் தடுத்த அதிமுக அரசு - சர்வாதிகாரம் செய்யும் எடப்பாடி!

தேர்தலை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 4ஆம் தேதியில் இருந்து மாநிலம் முழுவதும் 4000 சிறப்பு பேருந்துகளை இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால், இன்று தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தேர்தலை முன்னிட்டு 4000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பினை வெளியிட்டது. இன்று காலை 6 மணி முதல் சிறப்பு பேருந்துகளும் மாநகர பேருந்துகளும் இயக்கப்படாததால் வெளியூரை சேர்ந்த சென்னை வாசிகள் சொந்த ஊருக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஜனநாயக கடமையான வாக்களிக்க முடியாமல் போனதால் கடும் கோபத்தில் சென்னையை அடுத்த பெருங்களத்தூர் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பேருந்து நிலையம் அருகே காலை முதலே மக்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு வாக்களிக்க செல்வதற்காக காலை 6 மணி முதல் காத்திருந்த போதும் பேருந்து இல்லாததால் பொதுமக்கள் வாக்களிக்க முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

மேலும் அ.தி.மு.க அரசு வேண்டுமென்றே இன்று வாக்களிக்கும் பொதுமக்கள் ஊருக்கு சென்று வாக்களிக்கக் கூடாது என்று முடிவெடுத்து பேருந்துகளை இயக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் 2000க்கும் மேற்பட்டோர் பேருந்து இல்லாமல் தனியார் பேருந்தில் அதிக கட்டணம் செலுத்தி போக வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

மேலும் தினசரி கூலி தொழிலாளர்கள் பணம் இல்லாத காரணத்தால் தனியார் பேருந்தில் செல்ல முடியாமலும் அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பேருந்து நிலையத்திலேயே பல மணி நேரம் காத்திருக்க நேரிடுகிறது.

இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளில் பேருந்துகள் வரிசையாக இருக்கும் போது இன்று தேர்தல் நடக்கும்போது ஒரு பேருந்துகள் இங்கு இல்லை என்று குற்றம்சாட்டுகின்றனர். இது தமிழக அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு நடத்துவது போல தெரிகிறது என்று குற்றம்சாட்டுகின்றனர்.

Also Read: சுயமரியாதைத் தமிழகம் அமைக்க உறுதியேற்ற மு.க.ஸ்டாலின் முதல்வராய் அதை செயல்படுத்திக் காட்டுவார்: முரசொலி!