DMK Government
14 தொகுதிகளில் நேரடி போட்டி... பா.ஜ.க-வை மண்ணைக்கவ்வச் செய்யப்போகும் தி.மு.க வேட்பாளர்கள்!
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மும்முரமாகத் தயாராகி வருகின்றன. தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள் தேர்தலுக்காக தீவிரமாகச் செயலாற்றி வருகின்றனர்.
பாசிச பா.ஜ.க அரசை தனிப்பெரும் தலைவராக வன்மையாக எதிர்த்து வரும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், இந்தத் தேர்தலில் பா.ஜ.க-வை படுதோல்வியடையச் செய்யவேண்டும் என உறுதிபூண்டுள்ளார்.
அதன்படி, எதிர்வரும் தேர்தலில், பா.ஜ.க போட்டியிடும் 20 தொகுதிகளில், 14 தொகுதிகளில் நேரடியாக மோதுகிறது தி.மு.க. பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர்களை மண்ணைக்கவ்வச் செய்யப்போகும் தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலை இன்று அறிவித்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
பா.ஜ.க-வுடன் நேரடியாக மோதும் தி.மு.க வேட்பாளர்கள்:
1. திருவண்ணாமலை - எ.வ.வேலு (திமுக)
2. நாகர்கோவில் - சுரேஷ்ராஜன் (திமுக)
3. ராமநாதபுரம் - கா.காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம் (திமுக)
4. மொடக்குறிச்சி - சுப்புலட்சுமி ஜெகதீசன் (திமுக)
5. துறைமுகம் - பி.கே.சேகர்பாபு (திமுக)
6. ஆயிரம் விளக்கு - நா.எழிலன் (திமுக)
7. திருக்கோயிலூர் - க.பொன்முடி (திமுக)
8. திட்டக்குடி (தனி) - சி.வி.கணேசன் (திமுக)
9. விருதுநகர் - ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் (திமுக)
10. அரவக்குறிச்சி - இளங்கோ (திமுக)
11. திருவையாறு - துரை சந்திரசேகரன் (திமுக)
12. திருநெல்வேலி - லட்சுமணன்(திமுக)
13. தாராபுரம் (தனி) - கயல்விழி செல்வராஜ் (திமுக)
14. மதுரை வடக்கு - தளபதி (திமுக)
Also Read
-
“இதுபோன்ற ‘உடல்மொழிகள்’ கண்ணியமான அணுகுமுறை இல்லை!” : முதல்வருக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் கண்டனம்!
-
“சட்டமன்ற உரிமை என்பது அரசியல் பழிவாங்கலுக்கான ஆயுதமல்ல!” : தி.மு.க கொறடா எ.வ.வேலு கண்டனம்!
-
தனியார் பல்கலை. திருத்த மசோதா நிறைவேற்றம்.. சமூகநீதியை சீர்குலைக்கும் தவெக அரசு - கோவி. செழியன் கண்டனம்!
-
அருவெறுப்பான உரை... : முதலமைச்சர் விஜய் பேச்சை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்த தி.மு.க!
-
"இன்னும் எத்தனை உயிர்கள்?" - த.வெ.க அரசுக்கு கனிமொழி எம்.பி ஆவேச கேள்வி!