Election 2024
#ElectionResultsUpdates : தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணி 38 இடங்களில் முன்னிலை!
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகால பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்துதுவதற்காக 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ’இந்தியா’ கூட்டணியை உருவாக்கி தேர்தளில் களம் கண்டுள்ளனர். இதுவரை இப்படி எதிர்க்கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட்டது கிடையாது. இதனால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதியோடு நிறைவடைந்த தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி 40 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்நிலையில் தி.மு.க கூட்டணி தமிழ்நாட்டில் 38 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.
தூத்துக்குடியில் தி.மு.க வேட்பாளர் கனிமொழி 41,300 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். காஞ்சிபுரம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் க.செல்வம் 28,410 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
அதேபோல் நீலகிரியில் ஆ.ராசா 31,635 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். சேலம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் செல்வகணபதி 9,349 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார்.
மேலும் பெரம்பலூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் அருண் நேரு 58,096 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் முன்னிலையில் உள்ளார். அதேபோல் திருவள்ளூர் தொகுதியில் சசிகாந்த் செந்தில் 58,800 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.
மதுரை மற்றும் திண்டுகல் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர்கள் சு.செங்கடேசன், சச்சிதானந்தம் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். அதேபோல் காங்கிரஸ் 8 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மேலும் 2 தொகுதிகளில் விசிக, 2 தொகுதிகளில் சிபிஐ முன்னிலையில் உள்ளது.
Also Read
-
காங்கிரஸ் கட்சிக்கு 28+1 ; கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது!
-
ரூ.42.94 கோடியில் 14 விளையாட்டுத்துறை கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
10 மாவட்டங்களில்.. 10 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள்! : முதல்வர் திறந்து வைத்தார்!
-
திருவிழா போல் காட்சியளிக்கும் அண்ணா அறிவலாயம் : ஒரு புறம் கூட்டணி பேச்சு - மற்றொரு புறம் விருப்ப மனு!
-
ரூ.10.38 கோடி 2 புதிய ‘தோழி’ விடுதிக் கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!