Election 2024
மோடியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் முழக்கமிட்ட விவசாயிகள்... மோடி கையாண்ட உத்தி என்ன?
நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை நாடு முழுவதும் 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மீதமிருக்கும் தொகுதிகளுக்கு அனைத்து கட்சியினரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நாசிக்கில் மோடி இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது விவசாயிகள் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மகாராஷ்டிராவின் நாசிக் தொகுதியில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிக்கு ஆதரவாக மோடி பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மோடி பேசிக்கொண்டிருந்த நேரத்தில் கீழே அமர்ந்திருந்த விவசாயிகள் முழக்கமிட்டனர். அங்கிருந்த விவசாயிகள், அரசின் மோசமான நடவடிக்கையால் வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்று உரிமை குரல் எழுப்பினர்.
இதனால் அங்கு சற்று சலசலப்பு ஏற்பட்டது. எனவே மோடி சட்டென்று அமைதி காத்தார். பிறகு அந்த நேரத்தில் யோசித்த மோடி, 'ஜெய் ஸ்ரீ ராம்' என்றும், 'பாரத் மாதா கி ஜெய்' என்று முழக்கங்களை எழுப்பினார். விவசாயிகள் தங்கள் உரிமைகளை எழுப்பிய நேரத்தில் அவர்களுக்கு பதிலளிக்காமல், மோடியும் சமாளிப்பதற்காக 'ஜெய் ஸ்ரீ ராம்' என்றும், 'பாரத் மாதா கி ஜெய்' முழக்கங்களை எழுப்பியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
“2025 ஆம் ஆண்டு முடிவுற்று... 2026 ஆம் ஆண்டு பிறக்கிறது!” : முரசொலி தலையங்கம்!
-
பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் முதல் வீரர்களுக்கு ஊக்கத்தொகை வரை... துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அசத்தல்!
-
“2026-இல் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
“கீழடி,பொருநைக்கு சென்று பார்க்கச் சொல்லுங்கள்” : தமிழிசை சௌந்தரராஜனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
மற்றொரு நிர்பயா : பா.ஜ.க ஆளும் அரியானாவில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் - உடலில் 12 தையல்!