Election 2024
2 ஆம் கட்ட தேர்தல் - பிரச்சாரம் நிறைவு : 13 மாநிலங்களில் ஏப். 26ம் தேதி வாக்குப்பதிவு!
18 ஆவது மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 102 தொகுதிகளில் ஏப்.19 ஆம் தேதி நடைபெற்றது. 21 மாநிலங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 66% வாக்குகள் பதிவாகியுள்ளது. இது கடந்த 2019 தேர்தலைவிட குறைந்த வாக்குப்பதிவாகும்.
இதையடுத்து 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு ஏப். 26 வெள்ளிக்கிழமை 13 மாநிலங்களுக்கு உட்பட்ட 89 தொகுதிகளில் நடைபெறுகிறது.
அசாம் - 5 , பீகார் 5, சத்தீஸ்கர் -3, கர்நாடகா -14, கேரளா 20, மத்திய பிரதேசம் 7, மகாராஷ்டிரா 8, மணிப்பூர் 1, ராஜஸ்தான் 13, திரிபுரா 1, உத்தர பிரதேசம் 8, மேற்கு வங்கம் 3, ஜம்மு மற்றும் காஷ்மீர் 1 ஆகிய 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த மாநிலங்களில் அரசியல் கட்சிகளுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து வாக்குப்பதிவுக்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் 13 மாநிலங்களிலும் வேகவேகமாக நடைபெற்று வருகிறது. காலை 7 முதல் முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
Also Read
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!