Election 2024
தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது - அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் : காரணம் என்ன?
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கும் நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாநிலங்களிலும் பாஜகவின் NDA கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணியும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.
அதன்படி தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் உள்ள பாமக சார்பில், கடலூர் தொகுதியில் பிரபல இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான் போட்டியிடுகிறார்.
இந்த சூழலில் இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கடலூர் தென்னம்பாக்கம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது, அங்கிருந்த ஜோசியர் ஒருவரிடம் கிளி ஜோசியம் பார்த்துள்ளார். அந்த ஜோசியரும், தங்கர் பச்சான் மனதுக்கு பிடித்தமாறு ஒரு செய்தியை கூறியுள்ளார். தங்கர் பச்சான் கிளி ஜோசியம் பார்த்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து இதுகுறித்து பலரும் பல வித கருத்துகளை தெரிவித்த நிலையில், ஜோசியம் பார்த்த ஜோசியரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 4 கிளிகளை பறிமுதல் செய்தனர். வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் பச்சைக்கிளியை வீட்டில் வளர்ப்பதோ, கூண்டில் அடைத்து வைத்து ஜோசியம் பார்ப்பதோ வனத்துறை சட்டப்படி குற்றம் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
28,639 பேருக்கு ரூ. 254.59 கோடி மதிப்பில் பிரம்மாண்ட அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் வழங்கினார்!
-
5 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள்…அனைத்து தரப்பினருக்குமானது திராவிட மாடல் ஆட்சி: துணை முதலமைச்சர் பேச்சு!
-
சாலைப் பயணத்திற்கு இனி கவலை இல்லை… ரூ.1,843.85 கோடி செலவில் 11 சாலைகள்: திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
ரூ.211.90 கோடியில் 45 முடிவுற்ற, ரூ.53.76 கோடியில் 9 புதிய திட்டப் பணிகள்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கொ.ம.தே.க-விற்கு 2 சீட் ஒதுக்கீடு: கொங்கு மண்டலத்தில் தி.மு.க மிகப்பெரிய வெற்றி பெறும் - ஈஸ்வரன் பேட்டி!