Election 2024
நாடாளுமன்றத் தேர்தல் 2024 : தமிழ்நாடு 7 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் - முழு விபரம் !
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடந்த 10 ஆண்டுகால பாசிச பாஜக அரசை வீழ்த்த, நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளது.
இந்த கூட்டணி இந்தியா முழுவதும் தேர்தல் களத்தில் இறங்கவுள்ள நிலையில், இதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது. அண்மையில் டெல்லி, ஹரியானா, குஜராத், கோவா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்து உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ்நாட்டிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்தது.
அந்த வகையில் தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளும் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், அந்தந்த கட்சிகள் தங்கள் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தனர். அதன்படி நேற்று காங்கிரஸ் தங்கள் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வரை 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு :
1. திருவள்ளூர் - சசிகாந்த் செந்தில்
2. கடலூர் - விஷ்ணு பிரசாத்
3. கரூர் - ஜோதிமணி
4. சிவகங்கை - கார்த்தி சிதம்பரம்
5. விருதுநகர் - மாணிக்கம் தாகூர்
6. கிருஷ்ணகிரி - கோபிநாத்
7. கன்னியாகுமரி - விஜய் வசந்த்
8. புதுச்சேரி - வைத்திலிங்கம்
9. திருநெல்வேலி - - இன்னும் அறிவிக்கப்படவில்லை -
10. மயிலாடுதுறை - - இன்னும் அறிவிக்கப்படவில்லை -
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!