Election 2024
நாடாளுமன்ற தேர்தல் 2024 - 21 தொகுதிகளில் தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு : யார் யாருக்கு வாய்ப்பு?
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் 10 ஆண்டுகால பாசிச பாஜக அரசை வீழ்த்த, நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளனர். தமிழ்நாட்டிலும் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் 21 தொகுதிகளில் தி.மு.க போட்டியிடுகிறது.
இதனைத் தொடர்ந்து இன்று அண்ணா அறிவாலயத்தில் 21 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:-
1. திருபெரும்புதூர் - டி.ஆர்.பாலு
2. தூத்துக்குடி - கனிமொழி கருணாநிதி
3. நீலகிரி (தனி) - ஆ.ராசா
4. மத்திய சென்னை - தயாநிதி மாறன்
5. அரக்கோணம் - எஸ். ஜெகத்ரட்சகன்
6. வட சென்னை - Dr கலாநிதி வீராசாமி
7. தென் சென்னை - தமிழச்சி தங்கப்பாண்டியன்
8. காஞ்சிபுரம் ( தனி) - க.செல்வம்
9. வேலூர் - கதிர் ஆனந்த்
10. தருமபுரி - வழக்கறிஞர் அ.மணி
11. திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை
12. ஆரணி - தரணி வேந்தன்
13. கள்ளக்குறிச்சி - தே.மலையரசன்
14. சேலம் - டி. எம். செல்வகணபதி
15. ஈரோடு - கே.இ.பிரகாஷ்
16. கோவை - கணபதி பி.ராஜ்குமார்
17. பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி
18. பெரம்பலூர் - அருண் நேரு
19. தஞ்சாவூர் - முரசொலி
20. தேனி - தங்க தமிழ்ச்செல்வன்
21. தென்காசி (தனி) - Dr ராணி ஸ்ரீகுமார்
திமுக வேட்பாளர் பட்டியலில் 11 பேர் புதியவர்கள். 3 பெண்கள். அடிமட்ட தொண்டர்கள்/ ஒன்றியச் செயலாளர்கள் - 2 பேர், முனைவர்கள் - 2 பேர், மருத்துவர்கள் - 2 பேர், பட்டதாரிகள் - 19, வழக்கறிஞர்கள் - 6
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!