DMK
தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சட்டமன்ற உரை தொகுப்பு நூல் வெளியீடு!
தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்று வருகிறது.
தி.மு.க மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் சற்று முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தில் தி.மு.கழகத்தின் மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் தி.மு.க துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி வரவேற்புரையாற்றிப் பேசினார்.
பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சட்டமன்ற உரைகள் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சட்டமன்ற உரைகள் தொகுப்பு நூலை தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட, தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
Also Read
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!
-
ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் கடன் மதிப்பு ரூ.200 லட்சம் கோடியாக உயர்வு! : வெளியான அதிர்ச்சி தகவல்!
-
மின்கழிவுகள் மூலம் ஈட்டிய GST தொகை எவ்வளவு? : நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா MP கேள்வி!