DMK
தி.மு.கவில் இணைந்த கரூர், புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க, தே.மு.தி.க நிர்வாகிகள்!
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், கரூர் மாவட்டம் - தாந்தோணி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி வி.சிவகாமி வேலுச்சாமி மற்றும் தாந்தோணி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் எஸ்.வேலுச்சாமி ஆகியோர் தி.மு.கவில் இணைந்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (19.10.2021) மாலை, கரூர் மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த தாந்தோணி ஒன்றியப் பெருந்தலைவர் திருமதி வி.சிவகாமி வேலுச்சாமி மற்றும் தாந்தோணி மேற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.வேலுச்சாமி ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, கரூர் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், குளித்தலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி ஆகியோர் உடனிருந்தனர்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தே.மு.தி.க செயலாளர் க.ராமசாமி, மாவட்ட துணைச்செயலாளர் கா.சிவகுமார், மாவட்ட பொருளாளர் சாமி.சுரேஷ், மாவட்ட மாணவர் அணி துணைச்செயலாளர் ஆர்.எம்.பாலமுருகன், மாவட்ட பிரதிநிதி ஆ.நேரு மற்றும் அ.தி.மு.க மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச்செயலாளர் திருமயம் இரா.குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச்செயலாளர் எம்.முத்துராமன் ஆகியோர் தி.மு.கவில் இணைந்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (19.10.2021) மாலை, புதுக்கோட்டை தெற்கு மாவட்டம், தே.மு.தி.க.வைச் சேர்ந்த புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளர் க.ராமசாமி - மாவட்ட துணைச் செயலாளர் கா. சிவகுமார் - மாவட்ட பொருளாளர் சாமி.சுரேஷ் - மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் ஆர்.எம்.பாலமுருகன், மாவட்ட பிரதிநிதி ஆ.நேரு மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி இணைச் செயலாளர் திருமயம் இரா.குமார் - மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி துணைச் செயலாளர் எம்.முத்துராமன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் மாண்புமிகு கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் மாண்புமிகு எஸ்.ரகுபதி, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், திருமயம் தெற்கு ஒன்றியக் கழகப் பொறுப்பாளர் அழகு சிதம்பரம் ஆகியோர் உடனிருந்தனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!