தமிழ்நாடு

50 ஆண்டுகளுக்குப் பிறகு மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றிய தி.மு.க - ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று!

கடந்த 50 ஆண்டுகளுக்கு பிறகு மேல்மலையனூர் ஒன்றியக்குழுத் தலைவராக தி.மு.க பதவி ஏற்க உள்ளது.

50 ஆண்டுகளுக்குப் பிறகு மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றிய தி.மு.க - ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஒருங்கிணைந்த தென் ஆற்காடு மாவட்டமாக இருந்தபோது 1962 முதல் 1967 ஆண்டு வரை முதன்முதலில் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தின் சேர்மனாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஸ்ரேயன் குமார் ஜெயின் என்பவர் பதவி வகித்தார்.

இவரையடுத்து 1967ஆம் ஆண்டு மேல்மலையனூர் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஆர்.ஆர்.முனுசாமி மேல்மலையனூர் ஒன்றிய சேர்மன் பதவி வகித்தார். 1986 முதல் 1991 வரை அ.தி.மு.கவை சேர்ந்த தங்கவேல் என்பவர் சேர்மனாக பொறுப்பு வகித்தார்

இந்நிலையில், 1993ம் ஆண்டு கடலூர் மாவட்டத்திலிருந்து விழுப்புரம் மாவட்டம் புதிதாக தோற்றுவிக்கப்பட்டது. புதிதாக தோற்றுவிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் 22 ஒன்றியங்கள் உள்ளடங்கி இருந்தன. தொடர்ந்து நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.கவினர் மூன்று முறையும் பா.ம.க சார்பில் ஒரு முறையும் சேர்மன் பொறுப்பு வகித்தனர்.

இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டது. ஊராட்சிகளின் எல்லைகள் வரையறை காரணமாக விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தாண்டு மார்ச் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

50 ஆண்டுகளுக்குப் பிறகு மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்றிய தி.மு.க - ஆட்சிக்கு கிடைத்த நற்சான்று!

இதையடுத்து விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிட்டதை அடுத்து, விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள செஞ்சி மயிலம் திண்டிவனம் ஆகிய மூன்று தொகுதிகளில் உள்ள செஞ்சி, மேல்மலையனூர், வல்லம், மைலம், ஒலக்கூர், மரக்காணம், ஆகிய 6 ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றன.

இந்த 6 ஒன்றியங்களில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை ஆதரித்து சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

செஞ்சி, மேல்மலையனூர், வல்லம், மயிலம், ஒலக்கூர், மரக்காணம் ஆகிய ஆறு ஒன்றியத்தில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட மாவட்ட, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அமோக வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், மேல்மலையனூர் ஒன்றியத்தில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட 24 ஒன்றியக்குழு உறுப்பினர்களில் தி.மு.கவினர் 19 பேரும் தி.மு.க ஆதரவு சுயேட்சை ஒருவரும் வெற்றி பெற்று மேல்மலையனூர் ஒன்றியத்தை தி.மு.கவினர் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு மேல்மலையனூர் ஒன்றியக்குழுத் தலைவர் பதவியை தி.மு.க கைப்பற்றியுள்ளது கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சிக்கு கிடைத்திருக்கின்ற ஒரு நற்சான்று எனக் கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories