DMK

”100 நாளில் 40% தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய ஒரே ஆட்சி திமுகதான்” - அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்!

சென்னை வடக்கு மாவட்ட திமுக இலக்கிய அணி சார்பில் மறைந்த திமுக தலைவர் கலைஞருக்கு புகழ் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

வடக்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ரெயின்போ விஜயக்குமார் ஏற்பாட்டில் ராயபுரம் அறிவகம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மாநில இலக்கிய அணி செயலாளர் புலவர் இந்திரகுமாரி கலந்து கொண்டு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனையடுத்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.

நிகழ்ச்சியில் சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐடீரீம் மூர்த்தி , சூரியா வெற்றிக்கொண்டான் உள்ளிட்ட ஏராளமானோர் திமுகவினர் பங்கேற்றனர்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் P. K. பிகே சேகர்பாபு, பதவியேற்று நூறு நாட்கள் கூட முடியாத நிலையில் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை 40% நிறைவேற்றிய மாநிலம் என்றால் அது தமிழகம் தான் என்றால் அது மிகையாகாது என தெரிவித்தார். கடந்த பத்தாண்டுகளில் சொல்லொண்ணா துயரங்களை கஷ்டங்களை மக்களுக்காக தாங்கி நின்று களத்தில் மக்களுக்காக வாதாடி போராடி சாதித்தவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று கூறினார்.

மேலும் மக்கள் உரிமைகளுக்காக குரல் கொடுத்து சொந்த இன்பங்களை எல்லாம் மறந்து துன்பத்தையே தாங்கி அளவிட முடியாத பொருளாதார இழப்பிற்கு ஆளாகி எந்த வகையிலும் பயனற்ற ஒரு ஆட்சியை அகற்றுவதற்காக பாடுபட்ட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்றால் அது மிகையாகாது என்று கூறினார்.

10 ஆண்டுகளில் ஏற்பட்ட துன்பங்கள் மாறி ஒரு இன்பத்தைக் காண வேண்டிய சூழ்நிலையில் ஆட்சி அதிகாரம் கைக்கு வந்தும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் ஆட்சியை தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையப்பெற்ற பொழுது உயிர்க்கொல்லி நோயான கொரொனாவை நாம் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாக்கியது.

ஆட்சி அதிகாரம் கைக்கு வந்தும் கூட பதவியேற்பு விழாவை பெயரளவிற்கு நடத்திவிட்டு பதவியேற்ற நாள் முதல் முழுமையாக மக்கள் பணிகளை நிறைவேற்றிய ஆட்சியும் இயக்கம் என்றால் அது திராவிட முன்னேற்றக் கழகம் என்றால் அது மிகையாகாது தெரிவித்தார்.

Also Read: 10 ஆண்டுகால அ.தி.மு.க அரசின் ‘அசுர சுருட்டல்’ : SP.வேலுமணி வீட்டில் நடந்த விருந்து - ‘தினகரன்’ தலையங்கம்!