DMK

“கலைஞர் ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் வியத்தகு சாதனை படைத்த தமிழகம்” : மகுடம் சூடிய தி.மு.க-13

1996-2001 மற்றும் 2006-2011 ஆகிய இரண்டு முறை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக அரசு தமிழ்நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான அடித்தளம் அமைத்து வளர்ச்சி நிலையையும் எட்டியது. தி.மு.க அரசு 1996ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்ப கொள்கை 1997 என்ற தலைப்பில் தகவல் தொழில்நுட்ப கொள்கையை இந்தியாவிலேயே முதன்முதலாக வெளியிட்டு தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திட்டது. 2006 முதல் 2011 வரையிலான தி.மு.க ஆட்சிக்காலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்காக 29-7-2008 அன்று புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கை ஒன்றை தி.மு.க அரசு உருவாக்கி வெளியிட்டது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தொழில் நுட்ப வளர்ச்சிக்காக ரூபாய் 250 கோடியை அரசு ஒதுக்கீடு செய்தது. முதன்முதலாக 2006-2011 தி.மு.க ஆட்சி காலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஒரு அமைச்சர் பதவி உருவாக்கப்பட்டு ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டார்.

முதலமைச்சர் தலைமையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சரைத் துணைத் தலைவராகவும் பல்துறை அதிகாரிகளை உறுப்பினர்களாகவும் கொண்டு கணினி நிபுணர்கள் குழு ஒன்று தமிழக அரசால் அமைக்கப்பட்டது.

டைடல் பூங்கா : சென்னை தரமணியில் ரூபாய் 340 கோடி மதிப்பீட்டில் டைடல் பூங்கா உருவாக்கப்பட்டு 4-7-2000 அன்று இந்திய பிரதமர் வாஜ்பாய் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அந்த விழாவில் தலைமை உரையாற்றிய பிரதமர் வாஜ்பாய் அவர்கள் தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப வளர்ச்சித் திட்டங்களை பெரிதும் பாராட்டினார். சென்னையைத் தொடர்ந்து கோயமுத்தூர், திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய நகரங்கள் மற்றும் அதைப்போல் 19 இடங்களிலும் டைடல் பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டன.

தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலம்: சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் டாடா கன்சல்டன்சி சர்வீஸ், விப்ரோ, இன்போசிஸ், போலாரிஸ், காக்னிசன்ட் போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை அமைத்தன. சோழிங்கநல்லூரில் 370 ஏக்கரில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலம் ஒன்றை 13-5-2010 அன்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இங்கிலாந்தில் உள்ள வேர்ல்டுடெல் நிறுவனத்துடன் சேர்ந்து 13,000 சமுதாய இணைய மையங்களை தி.மு.க அரசு 1996-2001 ஆட்சிக் காலத்தில் தொடங்கியது. 2006-2011 தி.மு.க ஆட்சி காலத்தில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கணினி ஒரு பாடமாக ஆக்கப்பட்டது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கணினி பயிற்சி வழங்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு அரசு மென்பொருள் நிதி என்ற ஒன்றை டிட்கோ நிறுவனம் உருவாக்கியது. தகவல் தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்த டானிடெக் எனும் தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஒன்றை தி.மு.க அரசு 1998ஆம் ஆண்டு ஏற்படுத்தியது. தமிழக அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கை 29-9-2008 வெளியிடப்பட்டது.

பத்திரப்பதிவுத் துறை, மோட்டார் வாகனங்கள் துறை, நில பதிவேடுகள் மற்றும் வரைப்படங்கள் துறை, விற்பனை வரித் துறை போன்ற தமிழக அரசின் பல துறைகள் கணினிமயமாக்கப்பட்டன. அதேபோல் தஞ்சை, திருவாரூர், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் வட்டார அலுவலகங்கள் கணினிமயமாக்கப்பட்டன. ரூபாய் 3 கோடியே 27 லட்சம் செலவில் எல்காட் நிறுவனம் மூலம் தமிழ்நாடு அரசு வனத்துறை கணினி மயமாக்கப்பட்டது.

அனைத்து கிராம மாணவர்களுக்கு கணினி வசதி செய்து தரப்பட வேண்டும் என்பதற்காக மின் ஆளுமை முகவாண்மை அமைப்புகள் (e-government agency) வட்டாரங்கள் தோறும் ஏற்படுத்தப்பட்டன. இதன் மூலம் அரசின் திட்டங்களை மக்கள் அறிந்துகொள்ள முடிந்தது.

"தமிழ் நெட் 1999" எனும் கருத்தில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது. அரசு துணையுடன் அறிஞர்களின் முயற்சியால் தமிழ்விசைப் பலகையும் தமிழ் கணினி குறியீடுகளும் முறைப்படுத்தப்பட்டு செயலாக்கத்திற்கு கொண்டுவரப்பட்டன. 26-7-2000 அன்று தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்த உலக தொழில்நுட்ப பேரமைப்பு ஒன்று சிங்கப்பூரில் உருவாக்கப்பட்டது. உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் பயன்பெறும் வகையில் நூல்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதற்கு தமிழ்நாடு அரசு பெரும் முயற்சி எடுத்தது. தமிழ் இணையதள பன்னாட்டு பேரமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

உயிரியல் தொழில்நுட்பத்துறை மேம்பாடு : தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உரிய நிபுணர்களின் துணையுடன் தி.மு.க அரசு பல்வேறு தொழில் நுட்ப வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியது. அதன் ஒரு அங்கமாக, 22.11.2000 அன்று தி.மு.க அரசு தமிழ்நாடு தொழில்நுட்ப வாரியம் ஒன்றை அமைத்தது.

பெண்களுக்கான உயர்தொழில்நுட்பப் பூங்கா: 1996-2001 தி.மு.க ஆட்சி காலத்தில் சென்னை சிறுசேரியில் 20 ஏக்கர் நிலத்தில் மகளிருக்கான முதல் உயிரியல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டது. பெண்களுக்கான அந்த உயிரியல் தொழில்நுட்ப பூங்காவை இந்திய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் அவர்கள் 29-7-1998 அன்று தொடங்கி வைத்தார்.

பாராட்டும் விருதும் : 1996 முதல் 2000ம் வரை 1100 மென்பொருள் நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டன. 1999-2000 நிதிஆண்டில் தமிழ்நாட்டில் இருந்து ரூபாய் 1914 கோடி அளவு மென்பொருள் ஏற்றுமதி செய்யப்பட்டது. தகவல் தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்துவதில் இந்தியாவில் சென்னை முதலிடத்தில் உள்ளது என்று பிசினஸ் ஸ்டாண்டர்ட் எனும் பத்திரிகை பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழ் அரசின் தொழில்நுட்ப பிரிவு மத்திய அரசிடமிருந்து 2009ஆம் ஆண்டிற்கான வெப் ரத்னா (WEB RADHNA) விருது பெற்றது. தொழில்நுட்பத்துறையில் தமிழ்நாடு அரசு உலகளாவிய முதலீட்டை ஈர்த்தது.

சென்னையில் உயிரியல் தொழில்நுட்ப பூங்கா ரூபாய் 100 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டது அந்தப் பூங்காவில் ரூபாய் 1,000 கோடி மதிப்பிலான தொழிற் சாலைகள் அமைக்கப்பட்டன தி.மு.க ஆட்சிக்காலத்தில் மென்பொருள் தொழிற்சாலைகள் அதிகளவில் ஏற்படுத்தப்பட்டன.

தமிழ்நாடு முதலிடம் : தி.மு.க அரசின் மென்பொருள் உற்பத்தி சாதனையை 7-2-2000 அன்று வெளிவந்த எக்கனாமிக் டைம்ஸ் நாளேடு பாராட்டி எழுதியது. அதேபோல் டைம் பத்திரிக்கையின் தி.மு.க அரசை பெரிதும் பாராட்டியுள்ளது. உலக மென்பொருள் மையங்களில் ஒன்றாக சென்னை உயர்ந்தது. தி.மு.க ஆட்சியில் 2008-2009 ஆம் ஆண்டில் இந்தியாவின் தலை சிறந்த மென்பொருள் ஆளுமை மிக்க மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்ந்தது என ஐடிசி நிறுவனம் பாராட்டு தெரிவித்து.

தி.மு.க ஆட்சியில் இந்தியாவில் தமிழ்நாடு 2007-2008 ஆம் ஆண்டில் மென்பொருள் துறையில் மிகச் சிறந்து விளங்கியதாக அந்த ஆய்வு கூறுகிறது. மென்பொருள் சேவை வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக திகழ்ந்தது. மென்பொருள் துறையில் மிகச் சிறந்து விளங்கிய தமிழ்நாடு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு ஆற்றியது. இந்திய மற்றும் பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்களில் பல தமிழ்நாட்டில் செயல்படுகின்றன. இந்திய மென்பொருள் வருமானத்தில் தமிழ்நாட்டின் பங்கு 11 சதவீதமாக இருந்தது இதை பலரும் பாராட்டினார்கள் 2010 2011ம் ஆண்டு தி.மு.க அரசு காலத்தில் மென்பொருள் துறையில் தமிழ்நாடு மிகச்சிறந்து விளங்கியது.

தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்பத்துறை: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முதலீடு செய்து தொழில் நடத்த விரும்பி தேர்வு செய்யும் முதல்நிலை நகரமாக சென்னை உள்ளது தகவல் தொழில்நுட்பத்திற்கென்று சென்னை தலைமைச் செயலகத்தில் தனியே ஒரு துறை ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையின்கீழ் 5-10-1998 அன்று உருவாக்கப்பட்டது.

உலகத் தமிழ் இணைய பல்கலைக்கழகம் : உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் பயன்பெறும் வகையில் தமிழ் இணைய பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வா.செ.குழந்தைசாமி அவர்கள் அதற்கு முதல் தலைவராக இருநதார்.

அரசு மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகளில் கணினி மையங்கள்: மாநிலம் முழுக்க உள்ள 1,732 மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் கணினியை விருப்பப்பாடமாக வழங்கும் திட்டம் 187 கோடியே 65 லட்சம் செலவில் செயல்படுத்தப்பட்டது. அதேபோல் அரசு கலை, அறிவியல், கல்லூரிகள், மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள், வேளாண்மை மற்றும் கால்நடை கல்லூரிகள் ஆகியவற்றுக்கு ரூ.34 கோடியே 48 லட்சம் ரூபாயில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. ஆண்டுதோறும் 60 ஆயிரம் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கணினி கல்வி வழங்கப்பட்டது. கணினி கல்வித் திட்டம் இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களில் அறிமுகப்படுதப்பட்டது.

மென்பொருள் ஏற்றுமதி : தி.மு.க ஆட்சிக்காலத்தில் மென்பொருள் தொழிற்சாலைகள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டன. மென்பொருள் ஏற்றுமதி அதிகமானது. 1996 ஆம் ஆண்டு 37 கோடியாக இருந்த மென்பொருள் ஏற்றுமதி 1997 ஆம் ஆண்டு ரூ 161 கோடியாகவும் 1998 ஆம் ஆண்டு ரூ.393 கோடியாகவும், 1999 ஆம் ஆண்டு ரூ.1,246 கோடியாகவும், 2000ஆம் ஆண்டு ரூ.1,914 கோடியாகவும், 2001-ஆம் ஆண்டு ரூ.3,116 கோடியாகவும் அதிகரித்தது. அதன் பின் மீண்டும் 2006-ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சி ஏற்பட்டபோது தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதி ரூ.14,115 கோடி அளவில் இருந்தது. 2007ஆம் ஆண்டு ரூ.20,700 கோடியாகவும், 2008ஆம் ஆண்டு ரூ.28,000 கோடியாகவும், 2009ஆம் ஆண்டு ரூ.36,680 கோடி ஆகவும் மென்பொருள் ஏற்றுமதி இருந்தது. தமிழ்நாடு அரசின் மென்பொருள் ஏற்றுமதி 36,480 கோடி அளவுக்கு உயர்ந்தது.

எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை தி.மு.க ஆட்சியில் மென்பொருள் ஏற்றுமதி அதிகரிப்பைப் பாராட்டி எழுதியது. உலகின் மிகச்சிறந்த மென்பொருள் மையங்களில் ஒன்றாக சென்னை உயர்ந்துள்ளது. அதற்கு வேண்டிய கட்டமைப்பு வசதிகளும் மனித வளமும் சென்னையில் பெருகி உள்ளன என எகனாமிக் டைம்ஸ் எனும் ஆங்கில நாளிதழ் தி.மு.க ஆட்சியில் தமிழகம் அடைந்த தொழில்நுட்ப வளர்ச்சியை பாராட்டி எழுதியது.

2008-2009 ஆம் ஆண்டில் இந்தியாவின் தலைசிறந்த 5 மின் ஆளுமை மிக்க மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்ந்தது என இந்தியாவின் தலைசிறந்த ஐடிசி ஆய்வு நிறுவனம் தெரிவித்தது. தி.மு.க ஆட்சியில் இந்தியாவில் 2007-2008ம் ஆண்டில் மென்பொருள் துறையில் தமிழ்நாடு மிகச்சிறந்து விளங்கியதாக அந்த ஆய்வு கூறியது. மென்பொருள் சேவையில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதல் மாநிலமாக திகழ்ந்தது. இந்திய தொழில்நுட்ப வளர்ச்சியிலும் பொருளாதார வளர்ச்சியிலும் தமிழக அரசு பெரும் பங்கை அளித்து வருகிறது. வன்பொருள் நிபுணர்களின் மண்டலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. இந்தியா மற்றும் பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்களில் தமிழ்நாடு மிகச் சிறந்த நிலையில் உள்ளது.

இந்தியவின் தொழில்நுட்ப வளர்ச்சியில் 25 சதவீத வளர்ச்சிக்கு தமிழ்நாடு தான் முக்கிய காரணமாக திகழந்தது. தி.மு.க ஆட்சியில் தெற்கு ஆசியா கண்டத்தின் மிகச்சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப மையமாக தமிழ்நாடு திகழ்ந்தது. 2006-2011 தி.மு.க ஆட்சி காலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் தமிழ்நாடு மிகச் சிறந்து விளங்கியது தி.மு.க ஆட்சி காலத்தில் தமிழகத்தில் தொழில் நுட்பத் துறையில் மிகப்பெரிய புரட்சி நடந்தது

கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் 67 ஏக்கர் நிலப்பரப்பில் எல்காட் நிறுவனம் மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவை நிறுவியது மதுரை, திருச்சி போன்ற 27 இடங்களில் சிறப்பு தகவல் தொழில்நுட்பப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. சேலம் வேலூர் போன்ற பல மண்டலங்களில் தொழில் நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட்டன.

2011 தி.மு.க ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத்துறை மிகச் சிறந்து விளங்கியது தி.மு.க ஆட்சியில் பல அன்னிய முதலீட்டாளர்கள் தமிழகத்தில் முதலீடு செய்தனர் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப புரட்சி தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் நடந்தது தி.மு.க ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு தெற்கு ஆசியா கண்டத்தின் மிகச்சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப மையமாக உருவானது.

- பேராசிரியர் டாக்டர் சு.கிருஷ்ணசாமி, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் & உலகச் சுற்றுச்சூழல் பேரமைப்பின் முன்னாள் உறுப்பினர்.

Also Read: “சுதந்திர போராட்ட வீரர்களுக்கு கலைஞர் அரசு செயல்படுத்திய நலத் திட்டங்கள்” : மகுடம் சூடிய தி.மு.க-12