DMK
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு; மாவட்ட வாரியாக நேர்காணல் - திருவிழாக் கோலம் பூண்டிருக்கும் அறிவாலயம்!
எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையகமான அண்ணா அறிவாலயம் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.
தமிழ்நாடு- புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பி தலைமைக் கழகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடத்தவுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
நாளை (மார்ச் 2) முதல் மார்ச் 6ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக விருப்ப மனு அளித்தவர்களைச் சந்தித்து தொகுதி நிலவரம் - வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராயவிருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
நாள்தோறும் சுமார் 10 மாவட்டங்களைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் நேர்காணலில் பங்கேற்கவிருப்பதால், கழகத் தொண்டர்களால் - நிர்வாகிகளால் நிறைந்திருக்கிறது அண்ணா அறிவாலயம்.
பாசிச பா.ஜ.க - அடிமை அ.தி.மு.க அரசை வீழ்த்த இணைந்திருக்கும் வெற்றிக் கூட்டணியின், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையும், கழகத் தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தி.மு.க சார்பில் அமைக்கப்பட்ட தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் கூட்டணிக் கட்சியினரோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன. இக்கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கையெழுத்தானது.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையவிருப்பதை உறுதிசெய்யும் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணிக் கட்சியினர், தொண்டர்களால் விழாக்கோலம் பூண்டுள்ளது தி.மு.க தலைமையகம்.
Also Read
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!