DMK
சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளராக சிற்றரசு நியமனம் : இளைஞரணி அமைப்பாளராக ராஜா அன்பழகன் நியமனம்!
சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளராகவும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் திறம்படப் பணியாற்றி வந்த ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ, கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆற்றிய இடைவிடாத களப்பணியின்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், போராடி உயிர்நீத்தார்.
இந்நிலையில், மறைந்த ஜெ.அன்பழகன் வகித்த பொறுப்பை ஏற்க நே.சிற்றரசு அவர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
இதுகுறித்த அறிவிப்பில், “சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ மறைவெய்திய காரணத்தால், மாவட்ட கழகப் பணிகள் செவ்வனே நடைபெற நே.சிற்றரசு அவர்கள், சென்னை மேற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதேபோல், தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மேற்கு மாவட்ட தி.மு.க இளைஞர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த நே.சிற்றரசு அவர்கள் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ஜெ.அன்பழகன் அவர்களின் புதல்வர் ராஜா அன்பழகன், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி அமைப்பாளராக தலைமைக் கழக ஒப்புதலோடு நியமிக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
சென்னையில் ரூ.33.85 கோடி செலவில் புதிதாக 11 முதல்வர் படைப்பகங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் தவறாமல் செல்ல வேண்டிய இடம்... நவீன வசதியுடன் பசுமை பூங்கா... திறந்துவைத்தார் துணை முதலமைச்சர்!
-
தமிழ்நாட்டில் மேலும் 37.79 இலட்சம் மக்களுக்கு ரூ.2,000 சிறப்பு நிதி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அசத்தல்!
-
முத்தமிழறிஞர் கலைஞர் திருமண மாளிகை, புதிய பள்ளிக் கட்டடத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர்!
-
“இன்னொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதை அமெரிக்காவும் இஸ்ரேலும் எப்போது நிறுத்தும்?”: முரசொலி காட்டம்!