DMK
“என்ன செய்கிறது தி.மு.க?” - ஆளுங்கட்சியின் கேள்விக்கு இதோ இருக்கிறது பதில்! #DMKAgainstCorona
கொரோனா பேரிடர் சூழ்ந்திருக்கும் இக்கணத்தில், தமிழக மக்களுக்காகச் சுற்றிச் சுழன்று பணியாற்றி வருகின்றனர் தி.மு.க-வினர். தி.மு.க தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினின் சீரிய வழிகாட்டலில் கொரோனாவுக்கு எதிராகத் திறம்படச் செயல்பட்டு வருகின்றனர் கழக உடன்பிறப்புகள்.
பேரிடர்க் காலத்திலும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை காதில் வாங்காமல், முறைகேடுகளில் கவனம் செலுத்தி வருகிறது ஆளும் அ.தி.மு.க. அரசின் இடத்தில் நின்று பலன் எதிர்பாராமல் பணியாற்றி மதிப்புமிக்க எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறது தி.மு.க.
தினந்தோறும் கட்சியின் மாவட்ட செயலாளர்களிடத்திலும், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களிடமும், கழக நிர்வாகிகளிடமும் உரையாற்றி, கொரோனா நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
உதவி எண்களை அறிவித்து, கொரோனா பேரிடரிலிருந்து மக்களைக் காக்கும் விதமாக ‘ஒன்றிணைவோம் வா’ எனும் செயல்திட்டத்தையும் உருவாக்கி, ஏழை எளிய மக்களின் பிணி போக்க ‘மக்களின் அரசாகவே’செயல்படுகிறது தி.மு.க.
தி.மு.க-வின் நிவாரண உதவிகளைப் பெற்ற பயனாளிகள் வாழ்த்துகிறார்கள். பொறுப்பில் இருக்கும் அரசாங்கமோ எதிர்க்கட்சிகளின் மீது குற்றம்சாட்டுவதை மட்டுமே பணியாகக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், கொரோனா பேரிடர் காலத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் தலைமையில் கழகம் செய்யும் பணிகளை தொகுத்து ‘DMKAgainstCorona.com' எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
தி.மு.க மாணவரணி மாநில துணைச் செயலாளர் திருவொற்றியூர் கவி கணேசன் வீராசாமி மேற்பார்வையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தில் தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிக்கைகள், காணொளிகள், மாவட்டந்தோறும் தி.மு.க-வினர் முன்னெடுத்து வரும் நிவாரணப் பணிகள் உள்ளிட்டவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
களத்தில் என்ன செய்கிறது தி.மு.க எனக் கேட்கும் அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளுக்கு பதிலாகவே அமைந்திருக்கிறது இந்தத் தளம். பார்வையிட : https://dmkagainstcorona.com/
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!