DMK
தி.மு.க, அ.தி.மு.க மாநிலங்களவை வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு : வாபஸ் பெற மார்ச் 18 கடைசி நாள்!
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் இன்று பரிசீலிக்கப்பட்டன.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
எனவே அந்த இடங்களை பூர்த்தி செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த மார்ச் 6ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. தி.மு.க சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ, அ.தி.மு.க சார்பில் தம்பிதுரை, கே.பி.முனுசாமி, ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் தவிர சுயேட்சையாக பத்மராஜன், அக்னி ராமச்சந்திரன், இளங்கோ யாதவ் உட்பட மொத்தம் 9 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை செயலாளர் அறையில், வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் முன்னிலையில், பேரவை செயலாளரும், தேர்தல் நடத்தும் அலுவலரான சீனிவாசன், வேட்பு மனுக்களை பரிசீலனை செய்தார்.
வேட்பாளர்களின் வேட்பு மனுவை 10 சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்மொழிய வேண்டும். சுயேட்சை வேட்பாளர்களை யாரும் முன்மொழியாததால் அவர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து மார்ச் 18-ம் தேதி மாலை 3 மணிக்குள் போட்டியிட விரும்பாதவர்கள் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. யாரும் திரும்பப்பெறாத நிலையில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த 6 உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஒருவேளை போட்டி இருப்பின் மார்ச் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலை 5 மணிக்கே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!