DMK
தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளர், பொருளாளர் யார்? : மார்ச் 29ம் தேதி தேர்வு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
தி.மு.க பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு மார்ச் 29ம் தேதி நடைபெறவிருக்கிறது.
தி.மு.க-வின் பொதுச் செயலாளராக கடந்த 43 ஆண்டுகளாகப் பொறுப்பு வகித்து வந்த இனமானப் பேராசிரியர் உடல்நலக்குறைவால் கடந்த மார்ச் 7ஆம் தேதி காலமானார்.
இதையடுத்து, தி.மு.கவின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்புகள் பரவலாக எழுந்துள்ள நிலையில், தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் வருகிற 29ஆம் தேதி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “தி.மு.க பொதுக்குழு கூட்டம் வருகிற 29ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் எனது தலைமையில் நடைபெறும். அப்போது பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தி.மு.க பொதுச் செயலாளர் பொறுப்பிற்கு தற்போதைய தி.மு.க பொருளாளர் துரைமுருகன் போட்டியிட விரும்புவதால், பொருளாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளதை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதையடுத்து, இன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், “மார்ச் 29 அன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பொறுப்புகளுக்கான தேர்வு நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ஜனநாயகத்தின் குரல்வளையை தன் பூட்ஸ் காலால் நெறிக்கும் த.வெ.க அரசு : தி.மு.க ஆவேசம்!
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!