DMK
#CAA-வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் : நேரடியாக களத்தில் இறங்கி கையெழுத்து பெறும் மு.க.ஸ்டாலின்!
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றைக் கைவிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் பிப்ரவரி 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி 2 முதல் கையெழுத்து இயக்கம் தொடங்கியது. சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட திரு.வி.க.நகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று சென்னை தேனாம்பேட்டை பகுதியில் பொதுமக்களிடம் நேரடியாகச் சென்று குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் சிறுபான்மையினருக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி, கையெழுத்து பெற்றார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
அப்போது சிலரின் பெயர்களை தி.மு.க தலைவரே கேட்டு படிவத்தில் நிரப்பி கையெழுத்து பெற்றுக்கொண்டார். இந்த கையெழுத்து இயக்கத்தில் அனைத்து தரப்பட்ட மக்களும் கலந்துகொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அப்போது, தென் சென்னை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Also Read
-
1531.57 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம் 2041 : வெளியிட்டார் முதலமைச்சர்!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!