DMK

“குடியுரிமை சட்டத்தை எதிர்த்துப் பேரணியாகத் திரள்வோம்” - தி.மு.க மகளிரணிக்கு கனிமொழி அழைப்பு!

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டிசம்பர் 23ம் தேதி தமிழகம் முழுவதும் தி.மு.க தலைமையில் மாபெரும் பேரணி நடைபெற இருக்கிறது.

இதில், அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், அமைப்பினர் என அனைவரும் பங்கேற்குமாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இதனையடுத்து, தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழியும் பேரணியில் பங்கேற்குமாறு பெண்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாகப் பேசியுள்ள அவர், இந்தியாவில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் அ.தி.மு.கவினர் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

டிசம்பர் 23ம் தேதி நடைபெற இருக்கும் பேரணியில் பங்கேற்று அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க அரசுகளுக்கு எதிர்ப்பைத் தெரிவிப்பது நமது கடமை என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய இறையாண்மையைப் பாதுகாக்கும் வகையில் குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு பேரணியில் தி.மு.க மகளிரணியினர் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Also Read: “ஒற்றுமைக் குரலால் வெற்றியை ஈட்டுவோம்” - மாபெரும் பேரணிக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!